குழந்தைகளுக்காக சேர்ந்து வாழ இருக்கும் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா

கோலிவுட்டில் தனது பயணத்தை ஆரம்பித்து இன்று ஹாலிவுட் வரை சென்று அசத்தி வருபவர் நடிகர் தனுஷ். பிரபல இயக்குனர் கஸ்தூரிராஜாவின் இளைய மகனான இவர், ஆரம்பத்தில் நடிக்க வந்த பொழுது உருவ கேலி செய்யப்பட்டார். ஆனால் தன்னுடைய கடுமையான உழைப்பு மற்றும் நடிப்பு திறமையால் என்று தமிழின் முன்னணி கதாநாயகர்களில் ஒருவராக இருக்கிறார். இவர் நடிப்பில் கடைசியாக வெளிவந்த படம் திருச்சிற்றம்பலம். இந்த படம் சுமார் 100 கோடிக்கும் அதிகமான வசூலை பெற்றிருந்ததாக தகவல்கள் வெளியாகி இருந்தது. வரிசையாக இவர் வாத்தி, நானே வருவேன் போன்ற அடுத்த அடுத்த படங்களில் கமிட் ஆகி இருக்கிறார். இதில் வாத்தி திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு என இரண்டு மொழிகளில் உருவாகி வருகிறது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

குழந்தைகளுக்காக சேர்ந்து வாழ இருக்கும் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா 1

விளம்பரம்

இப்படத்தினை தொடர்ந்து கேப்டன் மில்லர் படத்தில் தனுஷ் பிசியாக நடித்து வருகிறார்.அடுத்தடுத்து தொடர்ந்து படங்களில் ஒப்பந்தமாகி ஓய்வில்லாமல் நடித்து வருகிறார் தனுஷ்.இவர் நடிப்பில் தெலுங்கு மற்றும் தமிழில் உருவாகியுள்ள வாத்தி படம் டிசம்பர் 2 ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாக உள்ளது.அண்மையில் செல்வராகவன் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடிப்பில் வெளிவந்த நானே வருவேன் படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றிருந்தது.

குழந்தைகளுக்காக சேர்ந்து வாழ இருக்கும் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா 2

விளம்பரம்

சில மாதங்களுக்கு முன்னர் இவரும் இவரது மனைவி ஐஸ்வர்யாவும் விவாகரத்து செய்துகொண்டு தனித்து வாழ இருப்பதாக அதிகாரபூர்வமாக அறிவித்திருந்தனர்.இது ரசிகர்களுக்கும் சினிமா உலகினருக்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது,இந்நிலையில் அண்மையில் நடிகர் ரஜினிகாந்த் இருவரையும் அழைத்து பேசியதாகவும் இதனால் இருவரும் மீண்டும் இணைந்து வாழ முடிவெடுத்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.இருப்பினும் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா தரப்பில் இருந்து எந்த தகவலும் வெளிவரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.இதனால் ரசிகர்கள் மகிழ்ச்சியாகியுள்ளனர் மேலும் விரைவில் இதுகுறித்து அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் என ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment