The Indian Times

கோமாளி பட இயக்குனர் கதாநாயகனாக அசத்தும் LOVE TODAY ட்ரைலர் இதோ

கோமாளி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராகியவர் பிரதீப் ரங்கநாதன். இப்படம் இவருக்கு பெரும் வரவேற்பினை தமிழ் சினிமாவில் பெற்றுக்கொடுத்தது.இப்படத்தினை தொடர்ந்து முன்னணி இயக்குனராக தமிழ் சினிமாவில் அவதாரம் எடுத்தார்.இப்படத்தினை தொடர்ந்து இவரே ஹீரோ ஆக முடிவு செய்து லவ் டுடே என்ற படத்தினை இயக்கி தற்போது ஹீரோவாகவும் நடித்து அசத்தியுள்ளார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

Advertisement

இப்படத்தினை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.நடனமாஸ்டர் சாண்டி நடனம் அமைத்துள்ளார்.இப்படத்தின் முதல் பார்வை போஸ்டர் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றிருந்தது.இப்படத்தில் இவருடன் நடிகை ராதிகா சரத்குமார்,யோகி பாபு,சத்யராஜ்,ரவீனா மற்றும் ஆஜீத் ஆகியோர் நடித்துள்ளனர்.இப்படத்தின் ட்ரைலரை தற்போது படக்குழு வெளியிட்டுள்ளது.ட்ரைலர் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது

Advertisement

ட்ரைலரில் தற்போது உள்ள காதல் வாழ்க்கையை தெளிவாக காண்பித்துள்ளார். தற்போது உள்ள இளைஞர்களிடம் ட்ரைலர் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது.ரசிகர்கள் படம் வெற்றிபெற தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.ஹீரோவாக அறிமுகம் ஆகும் முதல் படத்திலேயே பிரதீபுக்கு நல்ல வரவேற்பு ரசிகர்களிடம் கிடைத்துள்ளது.

Embed video credits : Sony music south

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in