The Indian Times

ஆதிபுருஷ்படத்தை கழுவி ஊற்றும் ரசிகர்கள்… இயக்குனரிடம் சண்டைக்கு சென்ற நடிகர் பிரபாஸ்

பாகுபலி படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகம் ஆகி பெரும் ரசிகர்கள் கூட்டத்தினை சேர்த்துள்ளவர் பிரபாஸ். தெலுங்கு படங்களில் மட்டுமே தொடர்ந்து நடித்து வந்த பிரபாஸுக்கு பாகுபலி படம் தமிழில் பெரும் வரவேற்பினை அளித்தது.இதனால் தற்போது அவர் நடிக்கும் தெலுங்கு படங்கள் தமிழ் மொழிகளிலும் வெளியாகி வருகிறது.பாகுபலி இரண்டு பாகங்களுக்கு பிறகு பெரும் எதிர்பார்ப்பில் வெளியாகிய ராதே ஷியாம் பெரும் தோல்வியை பெற்றுக்கொடுத்தது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

Advertisement

தற்போது இப்படத்திற்கு அடுத்து இயக்குனர் ஓம் ராட் இயக்கத்தில் ஆதிபுருஷ் படத்தில் நடித்துள்ளார்.இப்படத்தில் ராமர் ஆக பிரபாஸ் நடித்துள்ளார்.இராவணன் ஆக ஹிந்தி நடிகர் சைப் அலிகான் நடித்துள்ளார்.கதாநாயகியாக க்ரிதி சனோன் நடித்துள்ளார். பெரும் பொருட்செலவில் இப்படம் உருவாகியுள்ளது.தற்போது இப்படத்தின் டீசரை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த டீசர் ரசிகர்களை பெரும் அதிருப்தி ஆக்கியுள்ளது.

Advertisement

பலரும் இப்படத்தினை விமர்சனம் செய்தும் கேலி செய்தும் வருகின்றனர்.பொம்மை படம் கூட நல்லா இருக்கும் இது என்ன படம் என நெட்டிசன்கள் பயங்கர ட்ரோல் செய்து வருகின்றனர்.இதனால் கடுப்பாகிய நடிகர் பிரபாஸ் இயக்குனர் ஓம்மை மிரட்டும் தோணியில் என் அறைக்கு வா என கூறி சண்டைக்கு சென்றுள்ளார்.இந்த வீடியோ தற்போது பெருமளவு இணையத்தில் வைரலாகி வருகிறது.பாகுபலிக்கு பிறகு பிரபாஸுக்கு தொடர் தோல்வி படங்கள் மட்டுமே வெளியாகி கொண்டிருக்கிறது.அந்த வரிசையில் இப்படமும் இணையும் என்பது டீசரை பார்க்கும்பொழுதே தெரிவதாக சினிமா ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்

Embed video credits : Trend Talks

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in