இந்து மதம்னு ஒன்னு ராஜ ராஜ சோழன் காலத்துல இல்லை… வெற்றிமாறனுக்கு ஆதரவாக பேசிய கமல்ஹாசன்

தமிழ் சினிமாவில் உச்சத்தில் இருக்கும் நடிகர் உலகநாயகன் கமல்ஹாசன்.இவருக்கென தமிழ் சினிமாவில் பெரும் ரசிகர்கள் கூட்டமே உள்ளது.களத்தூர் கண்ணம்மா முதல் விக்ரம் வரை தனது ஒவ்வொரு படத்திலும் புதியதாக எதையாவது செய்து மக்களை மகிழ்விக்க நினைப்பார். எந்த கதாபாத்திரத்தில் நடிக்கிறாரா அதே கதாபாத்திரமாக மாரி அனைவரையும் வாயடைக்க செய்துவிடுவார் இவர்.குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகிய இவர் தற்போது அறிமுகம் ஆகும் நட்சத்திரங்களுக்கும்,கொடிகட்டி பறக்கும் நட்சத்திரங்களுக்கும் நடிப்பில் முன் உதாரணமாக திகழ்கிறார் கமல்ஹாசன். தமிழ் சினிமாவில் பல வெற்றிப்படங்களை கொடுத்தவர் இவர்.நடிகர் ஆக மட்டுமில்லாமல் இயக்குனராகவும் தமிழ் சினிமாவை அசத்தியவர்.இவர் இயக்கிய விருமாண்டி படமெல்லாம் இன்றுவரைக்கும் அதிக மக்களால் ரசிக்க கூடியவையாக உள்ளது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது 

கட்டாயம் படிக்கவும்  சைக்கிள் வாங்குறதுக்கு பெரிய ஆள் ஆகணுமா?.. குரங்குபெடல் படத்தின் டீசர் வெளியாகியது

இந்து மதம்னு ஒன்னு ராஜ ராஜ சோழன் காலத்துல இல்லை... வெற்றிமாறனுக்கு ஆதரவாக பேசிய கமல்ஹாசன் 1

விளம்பரம்

அரசியலில் களம் இறங்கிய கமல்ஹாசன்,நீண்ட நாட்களாக படம் நடிக்காமல் இருந்தார்.சுமார் 4 ஆண்டுகளுக்கு பிறகு நடிக்க முடிவு செய்து இயக்குனர் லோகேஷ் கனகராஜிடம் கதை கேட்டார்.கதை பிடித்துப்போகவே அதனை தானே தயாரிப்பதாகவும் முடிவு எடுத்தார்.அதன்படி உருவாகியது தான் விக்ரம்.இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.படத்தினை கமல்ஹாசனின் சொந்த தயாரிப்பு நிறுவனமான ராஜ்கமல் நிறுவனம் தயாரித்துள்ளது.இப்படத்தில் இவருடன் பகத் பாசில்,விஜய் சேதுபதி,காளிதாஸ் ஜெயராம் மற்றும் நரேன் ஆகியோர் நடித்துள்ளனர்.இப்படம் கடந்த ஜூன் மாதம் 3 ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகி மாபெரும் ஹிட் அடித்தது.

கட்டாயம் படிக்கவும்  தங்கசிலை போல மின்னும் நடிகை நயன்தாராவின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்

இந்து மதம்னு ஒன்னு ராஜ ராஜ சோழன் காலத்துல இல்லை... வெற்றிமாறனுக்கு ஆதரவாக பேசிய கமல்ஹாசன் 2

விளம்பரம்

அண்மையில் வெளியாகிய பொன்னியின் செல்வன் படம் குறித்து வெற்றிமாறன் ராஜ ராஜ சோழனை ஹிந்துவாக சித்தரித்துள்ளனர்.அவர் இந்து கிடையாது.என கூறியிருந்தார்.தற்போது பொன்னியின் செல்வன் படம் பார்த்த கமல்ஹாசன் செய்தியாளருக்கு பேட்டியளிக்கும் பொழுது இதுகுறித்து கேட்டபொழுது அதற்கு பதிலளித்த கமல் கூறியதாவது.இந்து மதம்னு பேரே ராஜ ராஜ சோழன் காலத்துல இல்லை, வைணவம்,சமணம் என இருந்தது வெள்ளைகாரங்க நமக்கு வச்ச பெயர்.என வெற்றிமாறனுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்துள்ளார்.

கட்டாயம் படிக்கவும்  PHOTOSHOOT-ல் கலக்கும் தமிழும் சரஸ்வதியும் சீரியல் ராகினி

விளம்பரம்

Embed video credits : Thi cinemas

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment