The Indian Times

வாத்தி கம்மிங் பாடலுக்கு நடனமாடிய ஜெனிலியா! வைரலாகும் நடன வீடியோ .

இன்று சினிமாவில் எக்ஸ்பிரெஷன் குயின் என்று சொல்லிகொண்டு பல நடிகைகள் சுற்றலாம். ஆனால் ஒரு காலத்தில் குழந்தைத் தனமான எக்ஸ்பிரெஷன்களை வைத்தே ஒட்டுமொத்த தமிழ் சினிமா ரசிகர்களையும் கவர்ந்த நடிகை ஜெனிலியா. சந்தோஷ் சுப்பிரமணியம், சச்சின் போன்ற படங்களை இன்று பார்த்தாலும் ஜெனிலியாவின் நடிப்பு ரசிக்கும்படி இருக்கும். 2012ஆம் ஆண்டு இவர் ரித்தேஷ் தேஷ்முக் என்ற ஹிந்தி நடிகரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். சினிமாவில் நடிப்பதை தாண்டி தற்போது இவர் தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தொடர்ந்து வீடியோ பதிவெற்றி வருகிறார்.

Advertisement

அதில் சமீபத்தில் ஸ்கேட்டிங் பயிற்சியில் ஈடுபட்டபோது கீழே விழுந்து தன கையை உடைத்துக்கொண்டார். பின்னால் அதை வைத்தும் ஒரு வீடியோ பதிவு செய்திருந்தார் அதுவும் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவியது. இந்நிலையில் தற்போது அந்த உடைந்த கையுடன் வாத்தி கம்மிங் பாடலுக்கு குத்தாட்டம் போட்டுள்ளார் ஜெனிலியா. ஜெனிலியா மட்டுமல்லாது தன் கணவர் ரித்தேஷ் தேஷ்முக் மற்றும் அவரது நண்பர்களும் இந்த பாடலுக்கு நடனமாடியுள்ளனர்.

Advertisement

கடந்த பொங்கலுக்கு விஜய் நடிப்பில் வெளிவந்த மாஸ்டர் திரைப்படம் மிக பெரிய வசூல் செய்தது. இதை தொடர்ந்து அனிருத்தின் அனல் பறக்கும் இசையில் இந்த படத்தில் இடம்பெற்ற வாத்தி கம்மிங் பாடல் உலகமெங்கும் வைரலாக பரவி எதிர்பார்க்காத அளவுக்கு வெற்றி அடைந்தது. இந்நிலையில் ஜெனிலியா இந்த பாடலுக்கு ஆடி இருப்பது விஜய் ரசிகர்களுக்கு உற்சாகமூட்டியுள்ளது.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in