The Indian Times

கர்ணன் டீசரை பார்த்து மிரண்டு போன பிரபல இயக்குனர்! கர்ணன் திரைப்பட டீசர் அப்டேட்.

தமிழ் சினிமாவில் துவங்கி தன நடிப்பாற்றலின் மூலம் ஹாலிவுட் சினிமா வரை உச்சம் தொட்ட நடிகர் என்றால் அது தனுஷ் தான். தனுஷ் தற்போது மாரி செல்வராஜ் இயக்கத்தில் கர்ணன் என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். பரியேறும் பெருமாளின் மெகா வெற்றியை தொடர்ந்து காரணன் திரைப்படத்தை தனுஷை வைத்து இயக்கி வருகிறார் மாரி செல்வராஜ். இந்த படத்தை கலைப்புலி எஸ்.தாணு தயாரிக்க சந்தோஷ் நாராயணன் இந்த படத்திற்கு இசையமைக்கிறார்.

Advertisement

இந்த படத்தின் 3 பாடல்கள் வெளியாகி வைரலாகி வருகிறது. கண்டா வர சொல்லுங்க பாடலை ஸ்டேட்டஸ் வைக்காத ஆட்களே இருக்க முடியாது. அதை தொடர்ந்து சமீபத்தில் வெளியான தட்டான் தட்டான் பாடலும் நல்ல வரவேற்பை பெற்றது. சந்தோஷ் நாராயணன் இசையில் தனுஷ் பாட ரசிகர்களை பெரியளவில் கவர்ந்திழுத்தது. இந்த வகையில் தற்போது இந்த படத்தின் டீஸர் காக ரசிகர்கள் அனைவரும் ஆர்வமாக காத்திருக்கின்றனர். அதில் தற்போது வெளியாகிய தகவல் , கர்ணன் திரைப்பட டீசரை பார்த்த பிரபல இயக்குனர் தனுஷ் மற்றும் பட குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

Advertisement

தனுஷை வைத்து திருடா திருடி என்ற வெற்றி படத்தை கொடுத்த இயக்குனர் சுப்பிரமணியம் சிவா இந்த படத்தின் டீசரை பார்த்து தனுஷை புகழ்ந்து தள்ளி உள்ளார். டீசரை பார்த்த அவர் தன த்விட்டேர் பக்கத்தில் கர்ணன் டீசரை பார்த்தேன் வேற லெவேளாக உள்ளது என்று ட்வீட் செய்துள்ளார். மேலும் காரணன் எல்லார் மனதையும் உல்லூக்காமல் விடமாட்டான் , உன் குழு மொத்தத்திற்கும் மிக பெரிய வெற்றிக்கான சத்தத்தின் வாழ்த்துக்கள் என்றும் குறிப்பிட்டுள்ளார். இதை பார்த்த தனுஷ் ரசிகர்கள் உற்சாகமாக டீசரை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in