The Indian Times

தளபதி 65ல் ரகசிய போலீஸ் ஏஜெண்டாக நடிக்கும் விஜய் !

தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக கொடிகட்டி பறப்பவர் தளபதி விஜய். மிக பெரிய ரசிகர் பட்டாளத்தை கொண்டுள்ள நடிகர் விஜய் சமீபத்தில் நடித்து வெளிவந்த படம் தான் மாஸ்டர். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் தயாரிப்பில் வெளிவந்த இந்த படம் கடந்த பொங்கலுக்கு திரையரங்கில் வெளியானது. கொரோனா பாதிப்பால் வெறும் 50 சதவீத இருக்கையில் வெளிவந்த மாஸ்டர் திரைப்படம் மிக பெரிய வசூல் சாதனை செய்து அசத்தியது. ஓ.டி.டி யில் வெளியான பிறகும் திரையரங்கில் கூட்டம் குறையாமல் வசூலை குவித்தது மாஸ்டர் திரைப்படம்.

Advertisement

தற்போது தளபதி விஜய் லோகேஷ் கனகராஜுடன் இனைந்து கொடுத்த பிரம்மாண்ட வெற்றியை தொடர்ந்து மீண்டும் ஒரு வெற்றி படத்தை கொடுப்பதற்கு நெல்சன் திலீப்குமாருடன் இணைந்துள்ளார். நயன்தாராவை வைத்து கோலமாவு கோகிலா என்ற வெற்றி படத்தை கொடுத்த இயக்குனர் நெல்சன் திலீப்குமார். சன் பிக்ச்சர்ஸ் தயாரிப்பில் நெல்சன் இயக்கத்தில் விஜய் நடிக்கும் படம் தளபதி 65. இந்த படத்தில் பூஜா ஹெக்டே கதாநாயகியாக நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இதை தொடர்ந்து இந்த படம் ரஸ்சியாவில் எடுக்க இருப்பதாகவும் , படப்பிடிப்பு ஏப்ரல் மாதம் துவங்க இருப்பதாகவும் தகவல் வெளியானது.

Advertisement

ஆனால் படப்பிடிப்பு இன்னும் தாமதமாகும் என்றும் கூறப்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்த படத்தின் புதிய அப்டேட் ஒன்று கிடைத்துள்ளது. இந்த படத்தில் விஜய் ரகசிய போலீஸ் உளவாளியாக நடிக்க உள்ளார் என்ற தகவல் கசிந்துள்ளது. ஏற்கனவே இந்த படத்தின் மேல் உள்ள எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டிருக்கும் நிலையில், இந்த செய்தியை கேட்ட தளபதி ரசிகர்களுக்கு மேலும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in