The Indian Times

ஆலம்பனா ஃபர்ஸ்ட் லுக் ரிலீஸ் | வைபவ் முனீஸ்காந்த்

தமிழ் சினிமாவில் அனைவரும் அறிந்த நடிகராக இருப்பவர் வைபவ். பெரும்பாலும் உள்ள அனைத்து வெங்கட் பிரபு படங்களிலும் நடித்த இவர் நீண்ட நாட்களாக வெற்றி படத்திற்காக காத்திருக்கிறார். இவர் சமீபத்தில் நடித்து வெளி வந்த எந்த திரைப்படங்களும் பெரியளவில் வெற்றியை இவருக்கு தேடி தர வில்லை. இவர் இறுதியாக லைவ் டெலிகாஸ்ட் என்ற வெப் சீரிஸில் நடித்து ஓ.டி.டி யில் வெளியானது. இதன் பிறகு தற்போது புதுமுக இயக்குநர் பாரி கே.விஜய் இயக்கத்தில் ஆலம்பனா என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார்.

Advertisement

இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்து விட்டாலும் போஸ்ட் ப்ரொடக்ஷன் பணிகள் நடந்து வருகின்றன. இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இன்று வெளியாகி உள்ளது. இந்த போஸ்ட்டரை பார்க்கும்போது காமெடி கலந்த பேண்டஸி திரைப்படமாக இருக்கும் என்று எதிர்பார்க்க படுகிறது. அலாவுதீனின் அற்புத விளக்கு என்ற படம் குழந்தைகளுக்கு பிடித்த பேண்டஸி படமாக வெளியானது அனைவருக்கும் தெரியும். அந்த வகையில் இந்த போஸ்ட்டரை பார்க்கும்போது வாய்பவின் கையில் அற்புத விளக்கு இருக்கிறது. அந்த விளக்கிலிருந்து வெளியேறும் பூதமாக முனீஷ்காந்த் இருக்கிறார்.

Advertisement

இந்த போஸ்ட்டரே படம் நகைச்சுவை கலந்த பேண்டஸி படம் என்பதை வெளி காட்டுகிறது. இந்த படத்தில் பார்வதி நாயர் கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும் முனீஷ்காந்த், திண்டுக்கல் ஐ.லியோனி, காளி வெங்கட், ஆனந்த்ராஜ், முரளிசர்மா, கபீர் சிங் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த போஸ்ட்டரை பார்த்த பல திரை பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in