The Indian Times

கொலைகார கூட்டத்தின் தலைவனாக நடிக்கும் தனுஷ். கிரே மேன் படத்தின் புதிய அப்டேட்!

உருவத்தை வைத்து எடை போடாதே என்று பலர் சொல்லி கேள்வி பட்டிருப்போம். தன் உருவ தோற்றத்தால் பல விமர்சனங்களுக்குள்ளானாலும் இன்று தன் நடிப்பாற்றலின் மூலம் தமிழ் திரைப்பட ரசிகர்களை கட்டியிழுத்து பல விருதுகளை குவித்த நடிகர் தனுஷ். தற்போது தனுஷ் அடுத்த ஒரு அசுர வெற்றிக்காக மாரி செல்வராஜ் இயக்கத்தில் கர்ணன் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். சந்தோஷ் நாராயணன் இசையமைப்பில் வெளி வந்த கர்ணன் திரைப்பட பாடல்கள் அனைத்துமே வைரலானது.

Advertisement

தற்போது இந்த படம் ஏப்ரல் 7 ஆம் தேதி வெளியாக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தமிழ் சினிமா மட்டுமல்லால் தன் திறமையால் பாலிவுட் ஹாலிவுட் என உலக சினிமா அளவில் தன் நடிப்பாற்றலை கொண்டு சேர்த்திருக்கிறார். சம்மீப நாட்களுக்கு முன்பு ஹாலிவுட் படமான “தி கிரே மேன்” என்ற படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் தனுஷ் நடிக்க உள்ளதாக தகவல் வெளியானது. தற்போது கர்ணன் திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் தி கிரே மேன் படத்தின் படப்பிடிப்பிற்காக கலிபோர்னியா சென்றுள்ளார் என்ற தகவல் வெளியாகி உள்ளது.

Advertisement

இந்த படத்தை ஆண்டனி மற்றும் ஜோய் ருஷ்சோ சகோதர்கள் இயக்கி வருகிறார்கள். கலிபோர்னியாவை தொடர்ந்து ஐரோப்பாவில் உள்ள பெராகுவே, செக் குடியரசு ஆகிய பகுதிகளில் வரும் ஏப்ரல் மாதம் படப்பிடிப்பு நடக்கவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதுமட்டுமில்லாது இந்த படத்தில் தனுஷ் கொலைகார கும்பலின் தலைவனாக நடிக்கிறார் என்ற புதிய தகவல் வெளியாகி உள்ளது.

ஏற்கனவே இவர் நடித்து கார்த்திக் சுப்ராஜ் இயக்கத்தில் வெளி வர இருக்கும் ஜகமே தந்திரம் படத்திலும் ஒரு காங்ஸ்டராக நடித்திருக்கிறார் என்று அனைவருக்கும் தெரியும். இதை தொடர்ந்து கிரே மேன் படத்திலும் ஒரு கொலைகாரன் கதாபாத்திரத்தில் நடிக்க போகிறார் என்ற கூறப்படுகிறது. இதை கேட்ட தனுஷ் ரசிகர்கள் படத்திற்காக ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in