யோகி பாபுவின் மண்டேலா டீஸர் வெளியீடு !

இன்றைய தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத நகைச்சுவை நடிகராக வலம் வருபவர் யோகி பாபு. இன்று எந்த இயக்குனர் படம் எடுத்தாலும் தன் படத்திற்காக நகைச்சுவை நடிகர் யாரை நடிக்க வைக்கலாம் என்பதை பற்றி யோசித்தால் அவர்களுக்கு முதலில் ஞாபகம் வருபவர் யோகி பாபுவாக தான் இருப்பார். ஆரம்பகாலத்தில் சினிமாவில் ஒரு சின்ன வாய்ப்பு கிடைத்தால் போதும் , ஒரு சீன் நடித்தால் போதும் என்று போராடிய இவர் இன்று முன்னணி காமெடி நடிகர்களுள் ஒருவராக வலம் வந்து கொண்டிருக்கிறார். ஒரு காலத்தில் காமெடி என்றாலே கவுண்டமணி செந்தில் , வடிவேலு , விவேக் , சந்தானம் ஆகியோர் தான் ஞாபகத்திற்கு வருவார்கள்.

கட்டாயம் படிக்கவும்  பிரமாண்டமாக நடைபெற்ற நடிகை எமி ஜாக்சன் திருமண நிச்சயம்

யோகி பாபுவின் மண்டேலா டீஸர் வெளியீடு ! 1

விளம்பரம்

ஆனால் இன்றோ சிறியவர் முதல் பெரியவர் வரை அனைவருக்கும் புடித்த காமெடி நடிகராக இருப்பவர் யோகி பாபு. படத்தில் காமெடி நடிகராக யோகி பாபு நடித்தாலே அதற்கென்றே மக்கள் படத்தை பார்க்க வருகிறார்கள். தற்போது இவர் காமெடி நடிகராக மட்டுமல்லாமல் கதாநாயகனாகவும் தொடர்ந்து நடித்து வருகிறார். படத்தில் நடிக்கும் முன்னணி நடிகர்களின் கால் ஷீட்டை கூட வாங்கி விடலாம் ஆனால் யோகி பாபு வை கையில் பிடிக்க முடியவில்லை என்று அனைத்து இயக்குனர்களும் கூறும் அளவிற்கு படங்கள் யோகி பாபு விற்கு குவிந்து கொண்டிருக்கிறது. இவர் ஹேர்ஸ்டைல் பார்த்தே சிரித்து விடும் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர்.

கட்டாயம் படிக்கவும்  இன்று ரம்ஜானை குடும்பத்துடன் கொண்டாடிய BIGGBOSS AISHU

யோகி பாபுவின் மண்டேலா டீஸர் வெளியீடு ! 2

விளம்பரம்

இந்நிலையில் தற்போது யோகி பாபு மண்டேலா என்னும் திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார். இந்த படத்தை தர்மம் , குரங்கு பொம்மை போன்ற படங்களை இயக்கிய மடோன்னே அஸ்வின் இயக்கி யுள்ளார். இந்த படத்தின் டீஸர் இன்று வெளியாக உள்ளது. படத்தின் டீசரே படம் அரசியல் கலந்த காமெடி படமாக இருக்கும் என்பதை எடுத்துரைக்கிறது.நெல்சன் மண்டேலா என்றழைக்கப்படும் யோகி பாபு ஒரு வித்தியாமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார் என்று பார்க்கும்போதே தெரிகிறது.

கட்டாயம் படிக்கவும்  இயக்குனர் வெற்றிமாறன் மற்றும் லோகேஷ் கனகராஜ் கலந்துகொண்ட ஷங்கர் மகள் திருமண வரவேற்பு புகைப்படங்கள்

விளம்பரம்

 

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment