The Indian Times

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளை ஓரம்கட்டி பாலிவுட் நடிகையை களமிறக்கிய அண்ணாச்சி !

லெஜெண்ட் சரவணா ஸ்டோர்ஸின் உரிமையாளர் சரவணன் தற்போது விளம்பரங்களில் நடித்தது போதும் இனி நடித்தால் வெள்ளி திரையில் தான் என்று தற்போது ஒரு படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை விக்ரம் மற்றும் தல அஜித் நடித்த உல்லாசம் , விசில் போன்ற படங்களை இயக்கிய ஜேடி ஜெர்ரி என்ற இரட்டையர்கள் இயக்கி வருகின்றனர். இந்த படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இயமைக்கிறார்.இந்த படத்தின் பாடலுக்காகவே பிரம்மாண்ட செட் ஒன்று அமைக்கப்பட்டது என்ற தகவல் வெளியானது.

Advertisement

அது போக சமீப நாட்களுக்கு முன்பு இந்த படத்தில் இடம் பெற்றுள்ள சில சண்டை கட்சிகளின் புகைப்படம் வெளியாகி சமூக வலைத்தளங்களில் பெரியளவில் வைரலானது. டக்கர் டக்கர் டாப்பு டக்கர் என்று சரவணா ஸ்டோர்ஸ் விளம்பரத்திற்கு நடனமாடிக் கொண்டிருந்த அண்ணாச்சி , எதிரிகளை லெஃப்ட்,ரைட்,என வெளுத்து வாங்கும் டாப்பு டக்கரான புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி கலக்கியது. இந்நிலையில் இந்த படத்தின் கதாநாயகியை பற்றி தகவல் வெளியாகி உள்ளது. இந்த படத்தில் கதாநாயகியாக நடிக்க வைப்பதற்கு முதலில் முன்னணி நடிகைகளான த்ரிஷா, மற்றும் நயன்தாராவை தான் தேர்வு செய்துள்ளனர்.

Advertisement

இது குறித்து த்ரிஷாவிடமும் , நயன்தாராவிடமும் பேச்சு வார்த்தை நடத்தி உள்ளனர். ஆனால் இருவருமே லெஜெண்ட் சரவணனுக்கு ஜோடியாக நடிக்க முன் வர வில்லை. விளம்பரத்திற்காகவே ஹன்சிகா தம்மன்னா வை நடிக்க வைத்த அண்ணாச்சி தன் திரைப்படத்தில் விட்டு விடுவாரா. தற்போது தன் திரைப்படத்தில் தனக்கு ஜோடியாக நடிக்க வைக்க பாலிவுட் ஹீரோயின்னை பிடித்துள்ளார் சரவணன். இந்த படத்தில் கதாநாயகியாக பாலிவுட் நடிகை ஊர்வசி ரவடுலா ஒப்பந்தமாகியுள்ளார் என்ற தகவல் வெளியாகி உள்ளது. இவருக்கு மிக பெரிய சம்பளம் பேசப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in