The Indian Times

அருவி சீரியல் கதாநாயகிக்கு இப்படி ஒரு குரலா… சிங்கர் சுவேதா மோகனையே ஓரம் கட்டிடாங்களே

‘டார்லிங் டார்லிங் டார்லிங்’என்ற படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்து சினிமாவிற்கு அறிமுகமாகியவர் லிவிங்ஸ்டன்.இப்படத்தினை தொடர்ந்து பல தமிழ் படங்களில் நடித்துள்ளார்,இவர் நடித்த பல படங்கள் இவருக்கு மாபெரும் வெற்றியையும் பெற்று கொடுத்தது.தமிழில் 100க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து வருகிறார்.கதாநாயகனாக ,நகைச்சுவை நடிகராக சினிமாவையே கலக்கியவர் லிவிங்ஸ்டன்.இவருக்கென அப்பொழுதே பெரும் ரசிகர்கள் கூட்டம் உள்ளது.தற்போதும் சில படங்களில் குணசித்ர கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்.வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

Advertisement

லிவிங்ஸ்டனுக்கு ஜோவிதா, ஜெம்மா என இரண்டு மகள்கள் உள்ளனர்.இதில் முதல் மகள் ஜோவிதா சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிய ‘பூவே உனக்காக’ என்ற தொடரில் கதாநாயகி பூவரசி என்ற கேரக்டருக்கு தோழியாக கீர்த்தி என்ற கதாபாத்திரத்தில் நடித்து வந்தார்.பின்னர் உயர்படிப்புக்கு செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டதால் தற்போது அந்த சீரியலில் இருந்து வெளியேறினார்.அப்பாவை போலவே சினிமாவில் ஏதேனும் சாதிக்க வேண்டும் என சின்னத்திரைக்குள் மீண்டும் அடியெடுத்து வைத்துள்ளார் ஜோவிதா. தற்போது சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் அருவி நாடகத்தில் நடித்து வருகிறார்.இவருக்கு இந்த நாடகத்தில் நல்ல வரவேற்பு மக்களிடம் கிடைத்துள்ளது.இதனால் தொடர்ந்து நாடகத்தில் கவனம் செலுத்தி நடித்து வருகிறார்

Advertisement

நடனத்தின் மீது அதிக ஈடுபாடு கொண்ட இவர் அடிக்கடி நடனமாடி இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ வெளியிட்டு வருகிறார் ,இவரின் நடனத்திற்கு பெரும் ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. நடனம் மட்டும் வரும் என்று நினைத்த நிலையில் தனக்கு பாடவும் வரும் என்பதை நிரூபித்துள்ளார் ஜோவிதா.தற்போது இவர் வா வாத்தி பாடலை அப்படியே பாடி அசத்தியுள்ளார்.இதனை வீடியோவாக எடுத்து இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.இந்த வீடியோ இவரது ரசிகர்களுக்கு பெரும் ஆச்சரியத்தினை ஏற்படுத்தியுள்ளது.உங்க குரலா இது செம்ம சூப்பரா இருக்கு சினிமாவில் பாட முயற்சி செய்யுங்கள் என கூறி கருத்துக்களை ரசிகர்கள் பதிவிட்டு வருகின்றனர்.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in