The Indian Times

ACTION…. இயக்குனராகிய தளபதி விஜய் மகன்… போடு செம்ம மாஸ்

தளபதி விஜய் தமிழ் சினிமாவில் உச்சத்தில் இருக்கும் நடிகர். இவருக்கென பெரும் ரசிகர்கள் கூட்டமே தமிழ் சினிமாவில் உள்ளது. தற்போது விஜய் படங்கள் என்றாலே அவை சரியாக ஓடாவிட்டாலும் பாக்ஸ் ஆபிசில் பல கோடிகளை வசூலித்து சாதனை படைத்தது வருகிறது. இதனால் இவர் படத்தினை தயாரிப்பதற்கு தயாரிப்பாளர்கள் ஆவலுடன் காத்துக்கொண்டிருக்கின்றனர்.அண்மையில் இவர் இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் பீஸ்ட் படத்தில் நடித்திருந்தார்.இப்படம் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு இடையே வெளியாகியது.இருப்பினும் மக்களிடம் எதிர்பார்த்த வரவேற்பினை பெறவில்லை,அதே சமயம் வசூலிலும் எந்த சரிவும் இல்லை. புகைப்படம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது 

Advertisement

தற்போது விஜய் தெலுங்கு பக்கம் இறங்கியுள்ளார்.தெலுங்கு சினிமா இயக்குனர் வம்சி இயக்கத்தில் தில் ராஜு தயாரிப்பில் தனது 66வது படமான வாரிசு படத்தில் நடித்துள்ளார்.இப்படத்தில் படத்தில் கதாநாயகியாக ராஷ்மிக்கா நடித்து வருகிறார்.மேலும் சரத்குமார் ,ஷியாம் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.இப்படத்திற்கு இசையமைப்பாளர் தமன் இசையமைக்கிறார்.பொங்கலுக்கு இப்படம் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது.ரசிகர்கள் படத்தினை பெருமளவு கொண்டாடி வருகின்றனர்.இப்படம் வெளியாகி11நாட்களில் உலகம் முழுவதும் 250 கோடி ரூபாயை வசூல் செய்துள்ளதாக தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது

Advertisement

தளபதி விஜய்க்கு அவரது மகன் ஜேசனை நடிக்க வைக்க வேண்டும் என ஆசை உள்ளது,ஆனால் அவருக்கோ இயக்குனராக வேண்டும் தான் எண்ணம் உள்ளதாக அவரது தாத்தா சந்திரசேகர் ஒரு பேட்டியில் தெரிவித்திருந்தார்.அதன்படி இவர் இயக்கி நடித்த குறும்படங்கள் அண்மையில் வெளியாகி வைரலாகியது,அதனை தொடர்ந்து தற்போது ஜேசன் புல் தி ட்ரிக்கர் என்ற படத்தினை இயக்கி வருகிறார்.இப்படத்திற்கு ஆக்சன் சொல்லி கிளப் போர்டு அடிக்கும் புகைப்படம் இணையத்தில் பெருமளவு வைரலாகி வருகிறது.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in