The Indian Times

உன் பேரு என்ன? இதே VOICE-ல பேசுங்க.. செய்தியாளர் சந்திப்பில் கடுப்பாகிய யோகி பாபு

தமிழ் சினிமாவில் முன்னணி நகைச்சுவை நடிகர் யோகி பாபு.இவருக்கு பெரும் ரசிகர்கள் கூட்டமே சினிமாவில் உள்ளது. யோகி படத்தில் நடித்து சினிமாவுக்கு அறிமுகம் ஆகியதால் இவர் யோகி பாபு என அனைவராலும் அழைக்கப்பட்டு வருகிறார்.ஆரம்பத்தில் விஜய் தொலைக்காட்சியில் லொள்ளு சபா நிகழ்ச்சியில் சிறிய சிறிய வேடத்தில் நடித்து சின்னத்திரையில் தனது கால் தடத்தினை பதித்தார்.தனது கடினமான முயற்சியினால் வெள்ளித்திரைக்குள் நுழைந்து இன்று சாதித்தும் உள்ளார்.ஆரம்பத்தில் மிகவும் கஷ்டப்பட்ட இவர் இன்று தனது கடின உழைப்பினால்,விஜய்,அஜித்,சூப்பர் ஸ்டார் படம் வரைக்கும் நகைச்சுவை நடிகராக அசத்தியுள்ளார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

Advertisement

நகைச்சுவை நடிகராக மட்டுமில்லாமல் தற்போது கதாநாயகனாகவும் சில படங்கள் நடித்து அதில் வெற்றியும் பெற்றுள்ளார்.தனது எதார்த்தமான நடிப்பு மற்றும் பேச்சுகளினால் இன்று இந்தளவு ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்து நுழைந்துள்ளார்.இவர் கதாநாயகனாக நடித்ததிலேயே மண்டேலா படம் மக்களிடம் அதிகம் வரவேற்பினை பெற்ற படம் ஆகும்.பல வெற்றி மற்றும் பல தோல்வி படங்களிலும் இவர் நடித்துள்ளார்.இவர் நகைச்சுவைக்காகவே ஓடிய படங்களும் உண்டு.அந்தளவிற்கு மக்களை சிரிக்க வைப்பதில் வல்லவர் யோகி பாபு.மேலும் பல படங்களில் ஒப்பந்தமாகி ஓய்வில்லாமல் தொடர்ந்து நடித்து வருகிறார்.

Advertisement

தற்போது யோகி பாபு பொம்மை நாயகி படத்தில் நடித்துள்ளார்.இப்படத்தின் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு வெளியே செய்தியாளர் சந்திப்பில் பேசி கொண்டிருக்கும் பொழுது செய்தியாளர் ஒருவர் சத்தம் அதிகமாக நீங்க சின்ன படத்தின் நிகழ்ச்சியிலெல்லாம் கலந்துகிட மாட்டிங்களாமே என கேட்க ,இதனால் கடுப்பாகிய யோகி பாபு வாரிசு படம் பெரிய படம் அது இசைவெளியீட்டு விழாவில் நான் கலந்துகொள்ள வில்லை,பொம்மை நாயகி சின்ன படம் நான் வந்திருக்கிறேன்,நேரமும் காலமும் தான் நிர்ணயிக்கணும் என கூறி உங்க பெயர் என்ன என செய்தியாளரை கேட்கவே ,அதற்கு பதில் கூறிய செய்தியாளரிடம் இதே குரலில் பேசுங்கள் என கூறி சென்றுள்ளார்.

Embed video credits : INDIAGLITZ TAMIL

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in