The Indian Times

கமல்ஹாசன் LIVE-ல் டப்பிங் பேசுவதை வியந்து பார்த்த விக்னேஷ் சிவன்

போடா போடி படத்தின் மூலம் சினிமாவிற்கு இயக்குனராக அறிமுகம் ஆகியவர் விக்னேஷ் சிவன்.இப்படத்தில் இவருக்கு எதிர்பார்த்த வரவேற்பு கிடைக்கவில்லை.இருப்பினும் நம்பிக்கையை தளரவிடாமல் தொடர்ந்து முயற்சி செய்து விஜய் சேதுபதி மற்றும் நயன்தாராவை வைத்து நானும் ரவுடி தான் என்ற படத்தினை இயக்கினார்.இந்த படம் மாபெரும் வரவேற்பினை பெற்றது.இப்படத்தினை தொடர்ந்து பல படங்களை தமிழில் இயக்கி வருகிறார்.அண்மையில் இவர் இயக்கத்தில் வெளியாகிய காத்து வாக்குல ரெண்டு காதல் திரைப்படம் நல்ல வரவேற்பினை ரசிகர்களிடம் பெற்று ரூ.66 கோடி ரூபாய் வசூலையும் பெற்றது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

Advertisement

இவர் அடுத்ததாக அஜித் குமார் வைத்து லைக்கா நிறுவனம் தயாரிப்பில் புதிய படத்தினை இயக்க உள்ளார். இப்படத்திற்கான வேலைகளை தொடங்கியுள்ளார். அண்மையில் இவருக்கும் நயன்தாராவுக்கும் திருமணம் முடிந்தது,திருமணம் முடிந்த கையோடு மீண்டும் தனது வேலையே தொடங்கியுள்ளார்.தற்போது 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டி சென்னையில் நடைபெற்று வருகிறது.இந்த நிகழ்ச்சிக்கான பாடலை விக்னேஷ் சிவன் இயக்கினார்,அதேபோல செஸ் ஒலிம்பியாட் நிகழ்ச்சியின் துவக்க விழாவை விக்னேஷ் சிவனும் அவரது குழுவும் வெற்றிகரமாக இயக்கியுள்ளது

Advertisement

இந்த நிகழ்ச்சிக்காக தயாரிக்கப்பட்ட சிறப்பு வீடியோவில் நடிகர் கமல்ஹாசன் பின்னணி குரல் கொடுத்துள்ளார்.இதற்காக விக்னேஷ் சிவனும் கமல்ஹாசனும் சேர்ந்து ஆலோசித்து வசனம் செலுத்தியுள்ளனர்.இந்த வீடியோவை விக்னேஷ் சிவன் அண்மையில் வெளியிட்டு நெகிழ்ந்திருந்தார்.இந்த வீடியோ மிகப்பெரிய அளவு வைரலாகியது.தற்போது கமல்ஹாசன் நேரிலையில் டப்பிங் பேசியுள்ளார்.இதனை விக்னேஷ் சிவன் வியந்து பார்த்துள்ளார்.இந்த வீடியோ நல்ல வரவேற்பினை ரசிகர்களிடம் பெற்றுள்ளது.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in