The Indian Times

அண்ணே என்கிட்டே கொடுங்க …கொட்டடித்து அசத்திய நடிகை திரிஷா

நடிகை திரிஷா ஜோடி படத்தின் மூலம் 1999ஆம் ஆண்டு சினிமாவிற்குள் சிறிய கதாபாத்திரத்தில் நடித்து அறிமுகம் ஆகியவர்.ஆரம்பத்தில் சிறிய சிறிய கதாபாத்திரத்தில் நடித்து வந்த இவர் இயக்குனர் ஹரி இயக்கத்தில் சாமி படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகம் ஆகினார்.இந்த படம் இவருக்கு பெரும் வரவேற்பினை பெற்றுக்கொடுத்தது.இந்த படத்தின் மூலம் பெரும் வரவேற்பினை தமிழ் சினிமாவில் பெற்று,முதல் படத்திலேயே முன்னணி நடிகை என்ற அந்தஸ்தினை பெற்றார்.தொடர்ந்து பல வெற்றி படங்களை கொடுத்து ரசிகர்களின் இதயங்களை கொள்ளை அடித்தார்.வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

Advertisement

தமிழ் மட்டுமில்லாமல் தெலுங்கு படத்திலும் நடித்துள்ளார்.தமிழில் இவர் அனைத்து முன்னணி நடிகர்களுக்கும் கதாநாயகியாக நடித்து விட்டார்.மேலும் கதாநாயகியாக மட்டுமில்லாமல் கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படத்திலும் நடித்தார்.ஆனால் இந்த படம் இவருக்கு எதிர்பார்த்த வரவேற்பினை பெற்று தரவில்லை என்றாலும் கடந்த 1999 ஆம் ஆண்டு முதல் தற்போது வரை 23 ஆண்டுகளாக தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வரும் ஒரே நடிகை இவர் தான்.தற்போது இவர் இயக்குனர் மணிரத்தினம் இயக்கத்தில் பொன்னியின் செல்வன் படத்தில் நடித்துள்ளார்.

Advertisement

இப்படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சிகளில் த்ரிஷா கலந்து வருகிறார்.அதன்படி ஹைதராபாத்தில் நடைபெற்ற ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் நடிகர்களை வரவேற்க கொட்டுகள் அடிக்கப்பட்டது.உடனே த்ரிஷா எழுந்து அருகில் உள்ளவரிடம் வாங்கி கொட்டடித்து அசத்தியுள்ளார்.இந்த வீடியோக்கள் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது.தற்போது ரசிகர்களால் ஷேர் செய்யப்பட்டு ட்ரெண்ட் ஆகி வருகிறது

Embed video credits : Manastars

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in