The Indian Times

கார்த்திக் சுப்ராஜ் பிறந்தநாளிற்கு குத்தாட்டம் போட்ட சீயான் 60 படக்குழுவினர்! | விக்ரம் துருவ் விக்ரம்

இயக்குனர் கார்த்திக் சுப்ராஜ் பேட்ட படத்தின் வெற்றியை தொடர்ந்து தற்போது தனுஷை வைத்து இயக்கியுள்ள படம் ஜகமே தந்திரம். பீட்சா, ஜிகர்தண்டா , பேட்ட , ஜகமே தந்திரம் இதை தொடர்ந்து தற்போது அவர், விக்ரம் மற்றும் துருவ் விக்ரம் வைத்து சியான் 60 திரைப்படத்தை இயக்க உள்ளார். மாஸ்டர் படத்தின் வெற்றியை தொடர்ந்து செவன் ஸ்கிரீன் லலித் குமார் இந்த படத்தை தயாரிக்கிறார். முழுக்க முழுக்க கேங்ஸ்டர் திரைப்படமாக உருவாகி வரும் இந்த படத்தில் துருவ் விக்ரம் ஹீரோவாகவும் விக்ரம் வில்லனாகவும் நடித்து வருகின்றனர் என்ற தகவல் வெளியானது.இதை தொடர்ந்து இந்த படத்தில் விக்ரமுக்கு ஜோடியாக சிம்ரனும் துருவ் விக்ரமுக்கு ஜோடியாக வாணி போஜனும் நடிக்கின்றனர்.

Advertisement

இந்நிலையில் இந்த படத்திற்கு முதலில் அனிருத் இசையமைக்க போவதாக இருந்தது. ஆனால் திடீரென்று அனிருதிற்கு பதிலாக சந்தோஷ் நாராயணன் இசையமைக்க போவதாக தகவல் வெளியானது. அனிருத் ஏன் இந்த படத்தை விட்டு நீக்கப்பட்டார் என்ற அதிகாரபூர்வ தகவல் ஏதும் வெளியிடப்பட வில்லை.இந்நிலையில் மார்ச் 19 கார்த்திக் சுப்ராஜ் பிறந்தநாளை ஒட்டி சீயான் 60 பட குழுவினர் கேக் வெட்டி கொண்டாடினர். அதில் விக்ரம் மற்றும் துருவ விக்ரம் கார்த்திக் சுப்ராஜிற்கு கேக் வெட்டும் புகைப்படம் வெளியாகி வைரலானது. இந்நிலையில் கார்த்திக் சுப்ராஜ் மற்றும் படக்குழுவினர் அனைவரும் குத்தாட்டம் போடும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

Advertisement

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in