The Indian Times

விஜய் சேதுபதியின் Man of Fusion டீசர் | வைரல் வீடியோ

தமிழ் சினிமாவில் கடந்த 10 வருடங்களில் 40க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து , மாஸ் ஹீரோ என்பதை தாண்டி நல்ல நடிகர் என்று எடுத்துக்காட்டியவர் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி. ஆரம்பகாலத்தில் துணை நடிகராக நடித்து கொண்டிருந்த விஜய் சேதுபதி முதல் முறையாக வில்லனாக சுந்தரபாண்டியன் என்ற படத்தில் நடித்தார் அதிலிருந்து இன்று வரை தொட்டதெல்லாம் விஜய் சேதுபதிக்கு வெற்றியாக அமைந்தது. சில இடங்களில் இவரது படங்கள் சறுக்கினாலும் விஜய் சேதுபதியின் நடிப்பிற்காகவே தனி ரசிகர்கள் இருக்கின்றனர்.

Advertisement

சமீபத்தில் வெளியான மாஸ்டர் திரைப்படம் விஜய் க்கு மட்டுமல்லாமல் விஜய் சேதுபதிக்கும் எதிர்பார்க்காத அளவிற்கு வெற்றியை தேடி தந்தது. அதை தொடர்ந்து தற்போது இவர் நடிப்பில் லாபம் , துக்லக் தர்பார் , யாதும் ஊரே யாவரும் கேளிர் ஆகிய படங்கள் வெளிவர இருக்கிறது. அதை தாண்டி விஜய் சேதுபதியின் 46 வது படம் பொன்ராம் இயக்கத்தில் உருவாகி கொண்டு வருகிறது. இந்நிலையில் விஜய் சேதுபதி எடுத்துக்கொண்ட போட்ஷூட் வைரலாகி வருகிறது. Man of fusion என்றழைக்கப்படும் இந்த போட்டோஷூட்டிற்கு விஜய் சேதுபதி தான் தயாரிப்பாளர். தற்போது இந்த போட்டோஷூட்டின் மேக்கிங் வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது.

Advertisement

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in