The Indian Times

Dont rush பாடலுக்கு நடனமாடிய கீர்த்தி சுரேஷ்! வைரல் வீடியோ.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை கீர்த்தி சுரேஷ். கிட்டத்தட்ட சினிமாவில் உள்ள அணைத்து சூப்பர்ஸ்டார்ஸ் உடனும் இவர் ஜோடியாக நடித்திருக்கிறார். இது என்ன மாயம் என்ற படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான கீர்த்தி சுரேஷ், தமிழ் ,தெலுங்கு ஆகிய மொழிகளில் நடிகையாக கலக்கி வருகிறார்.

Advertisement

இவர் இறுதியாக நடித்த திரைப்படம் மிஸ் இந்தியா திரைப்படம். அதற்க்கு முன்பு நடித்த பென்குயின் ஆகட்டும் மிஸ் இந்திய திரைப்படம் ஆகட்டும் இரண்டுமே ஓ.டி.டி யில் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

Advertisement

இவர் நடித்த நடிகையர் திலகம் என்ற படம் தெலுங்கு சினிமா மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த இந்திய சினிமாவையே திரும்பி பார்க்க வைத்து. தற்போது இவர் தமிழில் சூப்பர் ஸ்டார் நடிக்கும் அண்ணாத்த படத்தில் நடித்து வருகிறார். இதை தொடர்ந்து தற்போது இவர் தெலுங்கில் நடித்த ரங் தே திரைப்படம் திரைக்கு வர உள்ளது. இந்நிலையில் இந்த படத்தின் ட்ரைலர் நேற்று வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. கீர்த்தி சுரேஷின் நடிப்பிற்காகவே ட்ரைலர் வைரலாகி வருகிறது என்றும் கூறலாம். இந்நிலையில் தற்போது பிரபலமாக உள்ள dont rush challenge என்ற hashtag உடன் dont rush என்ற பாடலுக்கு நடனமாடி வீடியோ வெளியிட்டுள்ளார். தற்போது இந்த வீடியோ வைரலாகி வருகிறது.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in