The Indian Times

கோட் சூட் என புதிய கெட்டப்பில் கலக்கும் விஜய் சேதுபதி! மாநகரம் ரீமேக் மும்பைக்கர்.

தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியா கதாநாயகனாக வலம் வரும் நடிகர் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி. மாஸாகவும் நடிக்க தெரியும் மாஸாக இருக்கும் நடிகருக்கு வில்லனாகவும் நடிக்க தெரியும். சிறந்த ஹீரோ என்பதையும் தாண்டி மிக சிறந்த நடிகர் என்று பெயரெடுத்தவர் விஜய் சேதுபதி. இவருக்கு பட வாய்ப்புகள் எக்கச்சக்கமாக குவிந்து கொண்டிருக்கிறது என்பது நிதர்சனமான உண்மை. தற்போது லாபம் , துக்லக் தர்பார், யாதும் ஊரே யாவரும் கேளிர், காதுவாக்குல ரெண்டு காதல் , விஜய் சேதுபதி 46 என பல படங்களில் நடித்து வருகிறார் விஜய் சேதுபதி.

Advertisement

சமீபத்தில் இவர் நடிப்பில் வெளிவந்த மாஸ்டர் திரைப்படம் பெரியளவில் வசூலை குவித்தது. அதில் விஜய் சேதுபதியின் பவானி என்ற கதாபாத்திரம் ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பை பெற்றிருந்தது. இதை தொடர்ந்து இவருக்கு வில்லனாக நடிக்கவும் நிறைய பட வாய்ப்புகள் குவிந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் மாஸ்டர் படத்தை இயக்கிய லோகேஷ் கனகராஜின் முதல் படமான மாநகரம் படம் தமிழில் பெரியளவில் வரவேற்பை பெற்றது. இதை தொடர்ந்து இந்த படத்தின் ஹிந்தி ரீமேக் மும்பைக்கார் என்ற தலைப்பில் உருவாகி கொண்டிருக்கின்றது.

Advertisement

இந்த படத்தை சந்தோஷ் சிவன் இயக்கி வருகிறார்.இந்த படத்தில் தமிழில் நடித்த அணைத்து நடிகர்களும் தனக்கு கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்தை மிகவும் சிறப்பாக செய்திருப்பார்கள். தற்போது இதே கதாபாத்திரங்கள் வெவேறு நடிகர்களை வைத்து ஹிந்தியில் ரீமேக் ஆகிறது. அதில் முனீஸ்காந் கதாபாத்திரத்தில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடித்து இருக்கிறார். தற்போது மும்பைக்கார் படத்தில் இருந்து விஜய் சேதுபதியின் போட்டோ வெளியாகி வைரலாகி வருகிறது. விரைவில் படம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது .

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in