The Indian Times

மண்டேலா படத்தின் ஒரு நீதி பர்ஸ்ட் சிங்கள் பாடல்! | யோகி பாபு

இன்றைய தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத நகைச்சுவை நடிகராக வலம் வருபவர் யோகி பாபு. இன்று எந்த இயக்குனர் படம் எடுத்தாலும் தன் படத்திற்காக நகைச்சுவை நடிகர் யாரை நடிக்க வைக்கலாம் என்பதை பற்றி யோசித்தால் அவர்களுக்கு முதலில் ஞாபகம் வருபவர் யோகி பாபுவாக தான் இருப்பார்.

படத்தில் காமெடி நடிகராக யோகி பாபு நடித்தாலே அதற்கென்றே மக்கள் படத்தை பார்க்க வருகிறார்கள். தற்போது இவர் காமெடி நடிகராக மட்டுமல்லாமல் கதாநாயகனாகவும் தொடர்ந்து நடித்து வருகிறார்.இந்நிலையில் தற்போது யோகி பாபு மண்டேலா என்னும் திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார்.

Advertisement

இந்த படத்தை தர்மம் , குரங்கு பொம்மை போன்ற படங்களை இயக்கிய மடோன்னே அஸ்வின் இயக்கி யுள்ளார். சமீபத்தில் இந்த படத்தின் டீஸர் வெளியாகி வைரலானது. படத்தின் டீசரே படம் அரசியல் கலந்த காமெடி படமாக இருக்கும் என்பதை எடுத்துரைத்தது.

நெல்சன் மண்டேலா என்றழைக்கப்படும் யோகி பாபு ஒரு வித்தியாமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார் என்று பார்க்கும்போதே தெரிகிறது. இந்நிலையில் தற்போது இந்த படத்தின் பர்ஸ்ட் சிங்கள் பாடல் வெளியாகி உள்ளது. பரத் ஷங்கர் இசையில் ஒரு நீதி ஒன்பது சாதி என்ற பாடல் வெளியாகி வைரலாகி வருகிறது.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in