The Indian Times

டெடி படத்தில் டெடியாக நடித்து அசத்தியது யார் தெரியுமா?

எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் அந்த கதாபாத்திரமாகவே மாறி , தன் தத்ரூபமான நடிப்பால் ராசிகர்களை சேர்த்த நடிகர் ஆர்யா. இவர் நடித்த நான் கடவுள் , மதராசபட்டினம் போன்ற படங்கள் அனைத்திலும் ஆர்யாவின் நடிப்பு பெரியளவில் பேசப்பட்டது. சமீபத்தில் ஆர்யா நடிப்பில் வெளிவந்த டெடி திரைப்படம் டிஸ்னி ஹாட்ஸ்டாரில் வெளியானது. இந்த படத்தை டிக்டிக்டிக் இயக்குனர் சக்தி சவுந்தர் ராஜன் இயக்கியுள்ளார். ஆர்யாவுக்கு ஜோடியாக அவரது மனைவி சாயிஷா நடித்துள்ளார்.

 

Advertisement

டி.இம்மான் இசையில் வெளிவந்த இந்த படம் பெரும்பாலும் எதிர்பார்த்த அளவிற்கு வெற்றி அடைய வில்லை. இருந்தாலும் வித்தியாசமான கதை அம்சத்தோடு இந்த படத்தில் இருக்கும் டெடி பொம்மைக்காகவே இந்த படத்தை  மக்கள் ரசித்து பார்த்தனர். இந்நிலையில் இந்த படத்தில் கஷ்டப்பட்டு டெடி பொம்மையாக நடித்த நபரை இயக்குனர் சக்தி சவுந்தர் ராஜன் வெளிக்காட்டி உள்ளார். கோகுல் என்ற தியேட்டர் கலைஞர் தான் அந்த டெடி பொம்மையின் உடை அணிந்து இந்த படம் முழுக்க நடித்திருக்கிறார்.

Advertisement

அவரை பாராட்டும் விதமாக இந்த படத்தில் டெடி பொம்மைக்கு உயிர் கொடுத்தது கோகுல் தான் என்று தன் டிவிட்டேர் பக்கத்தில் ஆர்யா மற்றும் கோகுலுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

மேலும் இந்த படத்தில் டெடி பொம்மையின் தலை பாகம் கிராபிக்ஸ் செய்யபட்டுள்ளது. அதை Nxgenmedia எனும் கிராபிக்ஸ் நிறுவனம் தான் செய்து கொடுத்தது என்று டெடி படத்தில் உழைத்த அனைவரையும் பாராட்டும் படி பதிவு செய்துள்ளார் இயக்குனர்.

 

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in