The Indian Times

சூப்பர் ஸ்டார் ஒரு பட்டம் அவ்வளவுதான்… என் பையனுக்கு நான் சூப்பர் ஸ்டார் – கொந்தளித்த நடிகர் சரத்குமார்

தமிழ் சினிமாவில் கொடிகட்டி பறந்த நடிகர் சரத்குமார்.இவருக்கு பெரும் ரசிகர்கள் கூட்டமே தமிழ் சினிமாவில் உள்ளது. பலரையும் தனது நடிப்பால் அசத்தினார்.வில்லன் கதாநாயகன் என இரண்டிலும் பட்டையை கிளப்பி சினிமாவையே அசத்தினார்.1990 ஆம் ஆண்டு புலன் விசாரணை என்ற படத்தின் மூலம் சினிமாவுக்குள் அறிமுகம் ஆகியவர் சரத்குமார்.தனது கடின முயற்சியினால் கிடைக்கும் வேடங்களில் நடித்து பின்னர் கதாநாயகனாக நடித்து முன்னணி நடிகராக உருவெடுத்தார் சரத்குமார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

Advertisement

இவர் நடித்த சூரியன் படம் இவருக்கு நல்ல வரவேற்பினை சினிமாவில் பெற்றுத்தந்தது.மேலும் அதனை தொடர்ந்து மூவேந்தர் சூர்யவம்சம் என தொடர்ந்து ஹிட் படங்களை கொடுத்து தமிழ் சினிமாவையே ஒரு கலக்கு கலக்கியவர்.தற்போது சினிமாவில் மட்டுமில்லாமல் சொந்தமாக கட்சி வைத்து அரசியலிலும் கால் தடம் பதித்து அசத்தி வருகிறார்.தற்போதும் தொடர்ந்து வெப் சீரிஸ் மற்றும் படங்களில் நடித்து வருகிறார்.முதல் முறையாக தளபதி விஜய் உடன் இணைந்து வாரிசு படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். காஞ்சனா படத்தில் திருநங்கையாக நடித்து பெரும் வரவேற்பினை பெற்றார்

Advertisement

தற்போது சரத்குமார் வாரிசு படத்தில் நடித்துள்ளார்.இப்படத்தின் இசைவெளியீட்டு விழாவில் பேசிய சரத்குமார் விஜயை சூப்பர் ஸ்டார் என கூறியிருப்பார்.இது தற்போது கோலிவுட் வட்டாரத்தில் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.இதுகுறித்து பத்திரிகையாளர் சந்திப்பில் அவரிடம் கேட்ட பொழுது பயங்கர கடுப்பாகி சண்டைக்கு சென்றுள்ளார்.சூப்பர் ஸ்டார் ஒரு பட்டம் அவ்வளவுதான்,நான் ரஜினியை சூப்பர் ஸ்டார் இல்லைனு சொல்லல,விஜய் சூப்பர் ஸ்டார் என முன்னே சொன்னதை திரும்ப நியாபகப்படுத்தினேன்,இதை பெருசா ஆக்காதிங்க,பேச கூடிய விஷயம் நிறைய இருக்கு,நான் சுப்ரீம் ஸ்டார் ,சுப்ரீம் ஸ்டார் பெருசா சூப்பர் ஸ்டார் பெருசா என கேட்டு கொந்தளித்துள்ளார்.

Embed video credits : BINGOOBOX

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in