The Indian Times

பரதநாட்டியம் ஆடி பட்டையை கிளப்பிய CWC சிவாங்கி.. என்னம்மா ஆடுது இந்த பொண்ணு

விஜய் தொலைக்காட்சியில் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் மூலம் மக்களிடம் அறிமுகம் ஆகியவர் சிவாங்கி.இவர் பிரபல பாடகி ஸ்ரீமதி பின்னி கிருஷ்ணகுமார் மகள் ஆவார்.தன்னை போல தனது மகளும் இசையில் சாதிக்க வேண்டும் என சிவாங்கிக்கு இசை கற்றுக்கொடுத்தார். தனது குரலால் பல ரசிகர்களை கவர்ந்தார் சிவாங்கி .இவரின் குரலுக்கென பெரும் ரசிகர்கள் கூட்டமே உள்ளது.எப்பொழுதும் குழந்தை போல நகைச்சுவையாக சிவாங்கி வெளிப்படையாக பேசுவதால் பலருக்கும் பிடித்தமானவர் ஆகினார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

Advertisement

இவரது நகைச்சுவை திறமைக்கு சரியான சவாலாக குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கிடைத்த வாய்ப்பினை ஏற்றுக்கொண்டு அதை சரியாக பயன்படுத்தி குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கோமாளியாக களம் இறங்கினார்.தான் எதார்த்த பேச்சுகளினாலும் நகைச்சுவைகளினாலும் மக்களை சிரிக்க வைத்து அவர்களது இதயத்தில் நீங்காத இடத்தினை பிடித்தார்.தொடர்ந்து 3 சீசன்களாக இந்நிகழ்ச்சியில் கலக்கி வருகிறார் சிவாங்கி.மேலும் தற்போது வெள்ளித்திரையில் படங்கள் நடிக்க தொடங்கிவிட்டார்

Advertisement

தற்போது இவர் பரதநாட்டியம் ஆடி அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளார்.யார் இது நம்ம சிவாங்கியா என ரசிகர்கள் ஆச்சரியமாக கேட்கும் அளவிற்கு தனது திறமையை காண்பித்துள்ளார்.பாடல் மட்டும் பாடுவார் என நினைத்து வந்த நிலையில் தனக்கு நடனமும் அத்துப்பிடி என்பதை தற்போது நிரூபித்துவிட்டார்.இந்த வீடியோ ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது.ரசிகர்கள் சிவாங்கியின் நடனத்தினை பெருமளவு பாராட்டி நீங்கள் மென்மேலும் வளர வேண்டும் என கூறி வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in