The Indian Times

KGF பட இயக்குனர் பிறந்தநாளை கொண்டாடிய நடிகர் பிரபாஸ்

கன்னட நடிகர் யாஷ் நடிப்பில் இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் உருவாகி 2018ஆம் ஆண்டு வெளியாகிய படம் கேஜிஎப்.இப்படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.இந்த படத்திற்கு கிடைத்த வரவேற்பு இப்படத்தின் இரண்டாம் பாகத்திற்கு எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியது.

இப்படத்தின் இரண்டாம் பாகம் 5 மொழிகளில் கடந்த ஏப்ரல் 14 ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகி மாபெரும் சாதனையை வசூலில் படைத்துள்ளது.இதுவரை வெளியாகிய கன்னட படங்களில் முதல் முறையாக ஆயிரம் கோடி வசூலினை தொட்ட படம் இந்த படம் என்ற பெருமையை பெற்றுள்ளது.

Advertisement

தற்போது இப்படத்தின் இரண்டாம் பாகத்திற்கு கிடைத்த வரவேற்பினை தொடர்ந்து படத்தின் மூன்றாம் பாகத்தினை எடுக்க படக்குழு திட்டமிட்டுள்ளது.

இப்படத்தின் மூலம் இயக்குனர் நீல் பிரசாந்த் கன்னட சினிமாவை அடுத்த கட்டத்திற்கு கொண்டு சென்றுவிட்டார் என்று தான் சொல்ல வேண்டும்.இவரின் இயக்கத்திற்கும் பெரும் ரசிகர்கள் கூட்டம் சினிமாவில் உருவாகியுள்ளது .

தற்போது பிரசாந்த் நீல் நடிகர் பிரபாஸை வைத்து சலார் படத்தினை இயக்கி வருகிறார்.இப்படத்தில் கதாநாயகியாக ஸ்ருதிஹாசன் நடித்து வருகிறார்.

இப்படத்தின் படப்பிடிப்பு பிரம்மாண்டமாக நடைபெற்று வருகிறது.இந்நிலையில் இன்று இயக்குனர் பிரசாந்த் நீல் பிறந்தநாளை முன்னிட்டு நடிகர் பிரபாஸ் படப்பிடிப்பில் பிறந்தநாளை கொண்டாடியுள்ளார்.

இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.ரசிகர்கள் தங்களது வாழ்த்துகளை அவருக்கு தெரிவித்து வருகின்றனர்.

Advertisement

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in