The Indian Times

ஔவையார் கால ANCHOR அர்ச்சனா… பங்கமாக கலாய்த்த SK | KPY CHAMPIONS FINALE PROMO

விஜய் தொலைக்காட்சி பல கலைஞர்களை உருவாக்கியுள்ளது.இன்று வெள்ளித்திரையில் கொடிகட்டி பறக்கும் சிவகார்த்திகேயன்,சந்தானம் எல்லாம் விஜய் டிவியில் இருந்து உருவாகிய கிளைகள் தான்.விஜய் டிவி பலரின் திறமைகளை கண்டறிய பெரும் கருவியாக உள்ளது அனைவருக்கும் தெரிந்ததே.குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை எல்லாரிடமும் இருக்கும் திறமைகளை மக்களிடம் கொண்டு சென்று அவர்களை புகழின் உச்சியில் தூக்கி உட்கார வைக்கிறது.அந்தளவிற்கு பல திறமைகளை உலகிற்கு அறிமுகப்படுத்தி வருகிறது விஜய் டிவி.பல நிகழ்ச்சிகளை மக்களுக்கு அறிமுகப்படுத்தி அவர்களை மகிழ்விக்கிறதில் பெரும் பங்கினை விஜய் தொலைக்காட்சி ஆற்றி வருகிறது.சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் பாடிய பலரும் தற்போது சினிமாவில் பாடகராக உள்ளனர்.அதேபோல் கலக்க போவது யாரு சாம்பியன்ஸ் நிகழ்ச்சியில் வந்தவர்கள் எல்லாம் தற்போது சினிமாவை கலக்கி வருகிறார்கள் .வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

Advertisement

மக்களை மகிழ்விப்பதோடு மட்டுமின்றி திறமைகளையும் ஊக்குவிக்கின்றது.தற்போது விஜய் டிவி KPY சாம்பியன்ஸ் என்ற காமெடி நிகழ்ச்சி ஒன்றினை நடத்தி வருகிறது.இந்த நிகழ்ச்சி ரசிகர்களிடம் பெரும் வரவேற்பினை பெற்று வருகிறது.வாரம்தோறும் ஞாயிற்றுக்கிழமை மதியம் இந்நிகழ்ச்சி ஒளிபரப்படுகிறது.விஜய் தொலைக்காட்சியில் உள்ள பல நகைச்சுவை நட்சத்திரங்களும் இதில் கலந்துகொண்டு தங்களது நகைச்சுவை திறமையால் மக்களை வெகுவாக சிரிக்க வைக்கின்றனர்.நிகழ்ச்சியில் நடுவராக மதுரை முத்து,அர்ச்சனா மற்றும் ரோபோ சங்கர் உள்ளனர்.போட்டியாளர்கள் மத்தியில் நடுவர்கள் செய்யும் நகைச்சுவையும் மக்களை விழுந்து விழுந்து சிரிக்க வைக்கும் விதமாக தான் அமைந்துள்ளது.

தற்போது இந்த நிகழ்ச்சி இறுதிக்கட்டத்தினை எட்டியுள்ளது.நிகழ்ச்சியில் போட்டியாளர்கள் தங்களது முழு திறமையையும் காண்பித்துள்ளனர்.தற்போது இறுதி நிகழ்ச்சியின் ப்ரோமோவை விஜய் தொலைக்காட்சி வெளியிட்டுள்ளது.இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக நடிகர் சிவகார்த்திகேயன் கலந்துகொண்டுள்ளார்.மேலும் நிகழ்ச்சியின் எல்லா எபிசோடுகளையும் பார்த்துவிடுவதாகவும்,எல்லாரும் சூப்பராக பண்ணுவதாக தெரிவித்துள்ளார்.மேலும் நடுவராக இருக்கும் அர்ச்சனாவை பார்த்து அக்கா தொகுப்பாளர்களுக்கெல்லாம் முன்னோடி ஔவையார் கால ANCHOR அர்ச்சனா என பங்கமாக காலாய்த்திருக்கிறார்.

https://www.youtube.com/watch?v=RXzxEWFwYGo&ab_channel=VijayTelevision

Embed video credits : VIJAY TELEVISION

Advertisement

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in