The Indian Times

கேலி கிண்டல்களை தாண்டி LIGER படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?

நடிகர் விஜய் தேவர்கொண்டா நடிப்பில் இயக்குனர் பூரி ஜெகன்நாத் இயக்கத்தில் உருவாகி இன்று உலகம் முழுவதும் வெளியாகியுள்ள படம் லிகர்.இப்படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு கிளம்பியது காரணம் இப்படத்தில் நிஜ பாக்ஸர் மைக் டைசன் நடித்துள்ளார்.குத்துச்சண்டையை மையமாக வைத்து இப்படம் உருவாகியுள்ளது.கதாநாயகியாக அனன்யா பாண்டே நடித்துள்ளார்.இவர்களுடன் நடிகை ரம்யாகிருஷ்ணன் நடித்துள்ளார்.இப்படத்தினை தர்மா ப்ரொடக்ஷன் தயாரித்துள்ளது.இப்படம் அதிகாலை முதலே காட்சிகள் திரையிடப்பட்டு ரசிகர்கள் ஆரவாரமாக படத்தினை கண்டு வருகின்றனர்.

Advertisement

படம் ரசிகர்களிடம் எதிர்பார்த்த வரவேற்பினை பெறவில்லை.பெரும் எதிர்பார்ப்புகளுக்கு இடையே வெளியான இப்படம் நெகட்டிவ் விமர்சனங்களை ரசிகர்களிடம் பெற்றுள்ளது.இது படக்குழுவுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.பல கோடி செலவுகளில் எடுக்கப்பட்டுள்ள இப்படம் பல மொழிகளில் வெளியாகி தோல்வியை சந்தித்திருப்பது விஜய் தேவர்கொண்டாவுக்கு பெரும் பின்னடைவாக அமைந்துள்ளது.மைக் டைசனுக்காக படம் பார்க்க சென்ற பலரும் மைக் டைசனை படத்தில் நகைச்சுவையாக ஆக்கிவிட்டனர் என புலம்பி வருகின்றனர்.

Advertisement

இப்படி எல்லா இடங்களிலும் நெகட்டிவ் விமர்சனங்களை பெற்று வந்தாலும் லிகர் உலகம் முழுவதும் சுமார் 33 கோடியை வசூலித்து அனைவரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது.படம் கேலி மற்றும் கிண்டல்களை தாண்டி இத்தகைய கலெக்ஷனை பெற்றுள்ளது அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.மேலும் வரும் நாட்களில் வசூல் கூடலாம் என எதிர்பார்க்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in