The Indian Times

இனி நீங்க என்னை கேப்டன் அஞ்சலின்னு தான் கூப்பிடனும்..கெத்தாக BOAT ஓட்டும் நடிகை அஞ்சலி

கற்றது தமிழ் என்ற படம் மூலம் தமிழ் சினிமாவுக்குள் களம் இறங்கியவர் அஞ்சலி.போட்டோ என்ற தெலுங்கு படத்தின் மூலம் சினிமா உலகிற்கு அறிமுகம் ஆகினார்.கற்றது தமிழ் படத்தில் ஜீவாவுக்கு ஜோடியாக நடித்து நல்ல வரவேற்பினை பெற்றார்.இப்படம் இவருக்கு பெரும் திருப்புமுனையாக தமிழ் சினிமாவில் அமைந்தது.இப்படத்தினை தொடர்ந்து அங்காடி தெரு படத்தில் நடித்து தமிழ் சினிமாவையே அசத்தினார்.இப்படம் இவருக்கு முன்னணி நடிகை என்ற அந்தஸ்தினை தமிழ் சினிமாவில் வழங்கியது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

Advertisement

இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து தமிழ் படங்களில் வரிசையாக நடித்து அசத்தினார்.இவர் நடித்த தம்பி வெட்டோத்தி சுந்தரம்,கலகலப்பு,அங்காடி தெரு போன்ற படங்கள் ரசிகர்களிடம் இன்று வரை நல்ல வரவேற்பினை பெற்று வருகிறது.தற்போது கதைகளை கேட்டு அவர் கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் இருந்து வந்தால்தான் அதில் நடிக்க ஒப்புக்கொண்டு நடித்து வருகிறார்.இவர் தமிழில் மட்டுமில்லாமல் மலையாளம்,கன்னடம் போன்ற மொழிப்படங்களிலும் நடித்து வருகிறார்.இவர் தற்போது இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் ராம் சரண் நடிக்கும் படத்தில் நடித்து வருகிறார்

Advertisement

இன்ஸ்டாகிராம் பக்கத்தில் எப்பொழுதும் ஆக்டிவ் ஆக இருக்கும் இவர்.புதிய வீடியோக்களை மற்றும் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.தற்போது வெளிநாட்டில் சுற்றுலா சென்ற அஞ்சலி அங்கு கப்பலை இயக்கியுள்ளார்.இதனை வீடியோவாக எடுத்து இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அஞ்சலி பதிவிட்டுள்ளார்.இந்த வீடியோ ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்று பெருமளவு வைரலாகி வருகிறது

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in