The Indian Times

என் குரு பாரதிராஜா நல்லா இருக்கணும்..,நடிகை ராதிகா CHURCH-ல் வேண்டுதல்

தமிழ் சினிமாவின் பிரபல நடிகை ராதிகா.1978 ஆம் ஆண்டு கிழக்கே போகும் ரயில் என்ற படத்தின் மூலம் அறிமுகம் ஆகியவர் நடிகை ராதிகா.இப்படம் இவருக்கு நல்ல வரவேற்பினை பெற்று கொடுத்தது.இப்படத்தினை தொடர்ந்து பல தமிழ் படங்களில் நடித்து முன்னணி நடிகையாக உருவெடுத்தார்.ரஜினி,கமல் விஜயகாந்த் என பல முன்னணி நடிகர்களுக்கும் கதாநாயகியாக நடித்து அசத்தியுள்ளார் இவருக்கு பெரும் ரசிகர்கள் கூட்டமே 1980 மற்றும் 90களில் உள்ளது.இவர் பிரபல நடிகர் எம் ஆர் ராதாவின் மகள் ஆவார்.சினிமாவில் எளிதாக அறிமுகம் ஆகினாலும் அவரது கடின உழைப்பினால் மட்டுமே இன்று இந்த இடத்தில உள்ளார் ராதிகா. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

Advertisement

இவர் நடிகர் சரத்குமாரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.இவருக்கு இரண்டு மகன்கள் மற்றும் மகள் ஒருவர் உள்ளார்.தற்போது ராதிகா திரைப்படங்களில் குணச்சித்திர கதைகளில் நடித்து அசத்தி வருகிறார்.தற்போது சந்திரமுகி படத்தின் இரண்டாம் பாகத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் ராதிகா.இவ்வாறு சினிமா மற்றும் குடும்பம் என இரண்டையும் ஒரே நேர்கோட்டில் வைத்து சமமாக கவனித்து வருகிறார்.நடிகை ராதிகா நடிப்பிற்கு இன்று வரை பெரும் ரசிகர்கள் கூட்டம் உள்ளது.இவரை தமிழ் சினிமாவில் முதல் முறையாக அறிமுகப்படுத்தியது இயக்குனர் பாரதி ராஜா தான்.

Advertisement

தற்போது இயக்குனர் பாரதி ராஜா உடல்நல குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.இந்நிலையில் பிரான்ஸ் நாட்டில் உள்ள ராதிகா அவருக்காக அங்குள்ள சர்ச்சில் மெழுகுவர்த்தி ஏற்றி பாரதிராஜா உடல்நலம் பெற வேண்டி பிரார்த்தனை செய்துள்ளார்.இந்த வீடியோவை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு என் இனிய இயக்குன பாரதி ராஜா உடல்நலம் பெற வேண்டி பிரார்த்திப்பதாக தெரிவித்துள்ளார்.இந்த வீடியோ தற்போது இணையத்தில் பெருமளவு வைரலாகி வருகிறது.இதனை பார்த்த ரசிகர்கள் தாங்களும் பிரார்த்திப்பதாக தெரிவித்துள்ளனர்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in