The Indian Times

ROLEX ROLEX என ரசிகர்களுடன் சேர்ந்து விருமன் இசைவெளியீட்டு விழாவில் கத்தி அலப்பறை செய்த நடிகை அதிதி சங்கர்

தமிழ் சினிமாவின் பிரம்மாண்ட இயக்குனர் சங்கர்.குறைந்த அளவே படங்கள் இயக்கி இருந்தாலும் தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக வலம் வருகிறார்.காரணம் இவர் படத்தில் உள்ள கதையும் அதில் இருக்கும் பிரம்மாண்டமும் தான்.பல முன்னணி நடிகர்களும் இவர் நடிப்பில் ஒருமுறையாவது நடித்துவிடமாட்டோமா என ஏங்கி வருகின்றனர்.தற்போது இயக்குனர் சங்கர் தெலுங்கில் ராம் சரணை வைத்து ஆர்சி 15 என்ற படத்தினை இயக்கி வருகிறார்.இப்படத்தின் பெயர் விரைவில் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.ஷங்கர் இயக்கத்தில் உருவாக்கிய எந்திரன்,2.0 போன்ற படங்கள் எல்லாம் மாபெரும் வரவேற்பினையும் வசூலையும் தமிழ் சினிமாவுக்கு பெற்று கொடுத்துள்ளது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

Advertisement

இவரது மகளை தற்போது படத்தில் அறிமுகம் செய்துள்ளார்.நடிகர் கார்த்தி நடிப்பில் இயக்குனர் முத்தையா இயக்கத்தில் உருவாகி வரும் விருமன் படத்தின் மூலம் அதிதிசங்கர் கதாநாயகியாக தமிழ் சினிமாவிற்கு அறிமுகமாக உள்ளார்.அண்மையில் இப்படத்தில் இருந்து கஞ்சா பூவே கண்ணழகி எனும் பாடல் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது.யுவன் ஷங்கர் ராஜா இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.சூரி நகைச்சுவை நடிகராக நடித்துள்ளார்.ஆகஸ்ட் மாதம் 12
ஆம் தேதி இப்படம் வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.அதிதியின் முதல் படம் என்பதால் அதனை காண இயக்குனர் ஷங்கரும் ஆவலாக உள்ளார்.

Advertisement

நேற்று இப்படத்தின் ட்ரைலர் மற்றும் இசைவெளியீட்டு விழா மதுரையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது.இந்த விழாவில்,கார்த்தி.அதிதி ஷங்கர்,சூர்யா ,ஷங்கர்,பாரதிராஜா என படத்தில் நடித்த பலரும் கலந்துகொண்டனர்.இந்நிலையில் சூர்யா வருகைக்காக ரசிகர்கள் விக்ரம் படத்தில் அவர் நடித்த ரோலேக்ஸ் கதாபாத்திரம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளதால்,ரசிகர்கள் ரோலேக்ஸ் என ஆராவாரம் செய்தனர்,அவர்களுடன் இணைந்து நடிகை அதிதி சங்கரும் ரோலெக்ஸ் ரோலெக்ஸ் என கத்தி அலப்பறை செய்துள்ளார்.இந்த வீடியோ ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்று வைரலாகி வருகிறது

Embed video credits : 2D ENTERTAINMENT 

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in