The Indian Times

நாளாவது புள்ள நரகாசூரனா வந்து நிக்கான்…..பகைவர்களை பந்தாடும் கார்த்தியின் VIRUMAN TRAILER

நடிகர் கார்த்தி பருத்திவீரன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்குள் களம் இறங்கியவர்.முதல் படத்திலேயே கார்த்தியின் நடிப்புக்குமாபெரும் வரவேற்பு கிடைத்தது.அறிமுகமாகிய முதல் படத்திலேயே கிடைத்த பெரிய வரவேற்பு கார்த்தியை முன்னணி கதாநாயகனாக உயர்த்தியது.முதல் படத்தில் கிராமத்து ஆளாக வந்து மிரட்டிய கார்த்திக்கு அடுத்த படம் லிங்குசாமி இயக்கத்தில் பையா படத்தில் கதாநாயகனாக நடிக்க வாய்ப்பு கிடைத்தது. இப்படத்தில் மார்டன் ஆன சிட்டி பையனாக வந்து அசத்தி அனைவரையும் கவர்ந்தார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

Advertisement

பருத்திவீரன் படத்திற்கு பிறகு நீண்ட இடைவெளி கழித்து மீண்டும் இயக்குனர் முத்தையா இயக்கத்தில் கொம்பன் படத்தில் கிராமத்து ஆளாக நடிக்க வாய்ப்பு கிடைத்தது. கார்த்தி நடிப்பில் வெளியாகிய கொம்பன் படம் மக்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றது.தற்போது கொம்பன் வெற்றியை தொடர்ந்து அதனை தொடர்ந்து இரண்டாவது முறையாக கார்த்தி முத்தையா இயக்கத்தில் விருமன் படத்தில் நடித்துள்ளார் .இப்படத்தில் கதாநாயகியாக பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் மகள் அதிதி கதாநாயகியாக அறிமுகம் ஆகியுள்ளார்.இவர்களுடன் சூரி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.நடிகர் சூர்யா இப்படத்தினை தயாரித்துள்ளார்.

Advertisement

மேலும் இப்படத்தில் பிரகாஷ் ராஜ்,வடிவுக்கரசி,ராஜ்கிரண் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படம் ஆகஸ்ட் 12 ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாக உள்ளது.இன்று இப்படத்தின் ட்ரைலர் மற்றும் இசைவெளியீட்டு விழா மதுரையில் கோலாகலமாக நடைபெற்றது.விழாவில் இப்படத்தின் ட்ரைலரை படக்குழு வெளியிட்டுள்ளது ட்ரைலர் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது.படம் வெற்றிபெற ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்

Embed video credits : Sony music south

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in