The Indian Times

நடு ரோட்டில் 3 ஆண்டுகளுக்கு பிறகு தோழியை கண்ட CWC சிவாங்கி..கட்டியணைத்து பேச முடியாமல் திணறிய சிவாங்கி

விஜய் தொலைக்காட்சியில் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் போட்டியாளராக அறிமுகமாகியவர் சிவாங்கி.இவர் பிரபல பாடகி ஸ்ரீமதி பின்னி கிருஷ்ணகுமார் மகள் ஆவார்.விஜய் தொலைக்காட்சியில் போட்டியாளராக அறிமுகமாகி தனது குரலால் பல ரசிகர்களை கவர்ந்தார்.இவரின் குரலுக்கென பெரும் ரசிகர்கள் கூட்டமே உள்ளது.எப்பொழுதும் குழந்தை போல நகைச்சுவையாக சிவாங்கி வெளிப்படையாக பேசுவதால் பலருக்கும் பிடித்தமானவர் ஆகினார்.பெரும் பாடகியாக வேண்டும் என்பதே இவரது கனவு அதன்படி இவர் பல ஆல்பம் பாடல்களையும் பாடியுள்ளார்.இவரின் நகைச்சுவைக்கு அதிகளவில் ரசிகர்கள் உண்டு என்பதால் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் வாய்ப்பு கிடைத்தது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

Advertisement

இவரது நகைச்சுவை திறமைக்கு சரியான சவாலாக குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கிடைத்த வாய்ப்பினை ஏற்றுக்கொண்டு அதை சரியாக பயன்படுத்தி குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கோமாளியாக களம் இறங்கினார்.தான் எதார்த்த பேச்சுகளினாலும் நகைச்சுவைகளினாலும் மக்களை சிரிக்க வைத்து அவர்களது இதயத்தில் நீங்காத இடத்தினை பிடித்தார்.இவரின் வெகுளி தனமான பேச்சினால் பல ரசிகர்களையும் சிரிக்க வைத்து தனது வசம் இழுத்தார்.இவருக்கு சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை ஏகப்பட்ட ரசிகர்கள் உள்ளனர்.அந்தளவிற்கு பிரபலம் ஆகிவிட்டார் சிவாங்கி.

Advertisement

இவர் தற்போது இசைநிகழ்ச்சிக்காக கனடா நாட்டுக்கு சென்றுள்ளார்.அங்கு 3 வருடம் கழித்து தனது தோழியை நேரில் சந்தித்துள்ளார். சிவாங்கியை பார்த்த அவரது தோழி ஓடி வந்து அவரை கட்டியணைத்து தழுவி ஆனந்தத்தில் கண்ணீர் விட்டுள்ளார்.பதிலுக்கு தோழியை பார்த்த சந்தோஷத்தில் திகைத்து நின்றுள்ளார் சிவாங்கி.இந்த வீடியோவை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சிவாங்கி பகிர்ந்துள்ளார்.இந்த வீடியோ தற்போது இணையத்தில் பெருமளவு வைரலாகி வருகிறது.இதனை பார்த்த நெட்டிசன்கள் அடடே என்ன ஒரு நட்பு இருவருக்கும் என நெகிழ்ந்துள்ளனர்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in