The Indian Times

எளிமையாக ஆட்டோவில் செல்லும் வலிமை நாயகன் தல அஜித்! வைரல் வீடியோ உள்ளே.

தமிழ் சினிமா இண்டஸ்ட்ரி குள்ள சினிமா பின்னணியோட நுழைந்த பல நடிகர்கள் இன்னிக்கு காணாம போயிருக்காங்கனே சொல்லலாம். சினிமாகுள்ள ஈசி ஆ நுழஞ்சே சாதிக்க முடியாம இருக்க பல ஹீரோக்கள் மத்தியில, எந்த ஒரு சினிமா பின்னணியுமே இல்லாம இன்னிக்கு தன்னோட கடின உழைப்பால தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமா ஜொலிச்சுட்டு இருக்காரு தல அஜித். இவுரோட படம் ரிலீஸ் ஆனா தியேட்டர் ஏ திருவிழா போல ஆரவாரமா இருக்கும். இவரு ஒரு நல்ல நடிகர்ன்றதையும் தாண்டி தனக்குள்ள பல திறமைகளை ஒளிச்சு வெச்சிருக்காருங்க. கார் ரேஸ் , பைக் ரேஸ் , துப்பாக்கி சூடு இப்படி இப்படி பல போட்டிகள் ல கலந்து சாதிச்சு கட்டிருக்காரு.

Advertisement

சமீபத்துல தல நடிச்ச பில்லா ரீ ரிலீஸ் ஆகி அஜித் ரசிகர்கள உற்சாகபடுத்துச்சு. ஆனா அஜித் ரசிகர்கள் என்னவோ வெய்ட் பண்ணிட்டு இருக்கறது ஒரே ஒரு படத்துக்கு தா. அது தல அஜித் நடிச்ச வலிமை படம் தான் ங்க. போனி கபூர் தயாரிப்புல எச்.வினோத் இயக்கத்துல தல அஜித் நடிச்சுட்டு இருக்க படம் தான் வலிமை. இந்த படத்தோட பெயர் வலிமை அப்டிங்கிறத தவற ரொம்ப நாளாவே இந்த படத்தோட எந்த அப்டேட்டுமே கிடைக்காம இருந்துச்சு. ரொம்ப நாளா வலிமை அப்டேட் கேட்டுட்டு இருந்த அஜித் ரசிகர்களுக்கு ஒரு சிறப்பான அப்டேட் படக்குழுவினர் வெளியிட்டாங்க.

Advertisement

மே 1 உழைப்பாளர் தினம் னு சொல்றத விட தன்னோட உழைப்பால உயர்ந்த தல அஜித் பிறந்தநாள் னு சொன்னா தான் இங்க நிறைய பேர்க்கு தெரியும். தல அஜித் பிறந்தநாள் அன்னிக்கு பர்ஸ்ட் லுக் வெளியிடப்போறதா பட குழுவினர் அறிவிச்சிருந்தாங்க. இதுல ரொம்பவே சந்தோஷமடைஞ்ச அஜித் ரசிகர்கள் பர்ஸ்ட் லுக் எப்படி இருக்க போகுதோ னு ரொம்ப ஆர்வமா காத்துட்டு இருகாங்க. இந்த நேரத்துல அஜித் ரசிகர்களுக்கு நம்ம தல அஜித் ஆ இது னு ஆச்சரியமடையுற அளவுக்கு ஒரு வீடியோ கெடச்சுருக்கு. ரீசென்ட் ஆ அஜித் ஒரு ஆட்டோ ல போகுற வீடியோ சோசியல் மீடியா வையே கலக்கி வந்துட்டு இருக்கு.கோடிக்கணக்கான ரசிகர்கள் இருக்க ஒரு நடிகர் இப்படி ஆட்டோ ல எளிமையா போறது எல்லாரையுமே நெகிழ்ச்சி அடைய செஞ்சிருக்கு. ஆயிரம் விமர்சனம் இவரு மேல எழுந்தாலும் , என்னிக்குமே தல தல தான்!

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in