The Indian Times

யாதும் ஊரே யாவரும் கேளிர் படத்தின் முருகா பர்ஸ்ட் சிங்கள் பாடல் | விஜய் சேதுபதி மேகா ஆகாஷ்.

தமிழ் சினிமாவில் இயல்பாக நடித்து பல இதயங்களை கவர்ந்த நடிகர் என்றால் அது விஜய் சேதுபதி தான். ஹீரோ கதாபாத்திரம் என்றாலும் சரி வில்லன் கதாபாத்திரம் என்றாலும் சரி அதை தன் தத்ரூபமான நடிப்பில் நடித்து முடித்து கொடுப்பார். இவர் இறுதியாக நடித்து வெளிவந்த திரைப்படம் குட்டி ஸ்டோரி. அதில் ஒரு பாகத்தில் நடித்திருந்தாலும் அனைவரையும் ரசிக்கும்படி செய்தார். அதற்கு முன்பு இவர் வில்லனாக நடித்து வெளிவந்த மாஸ்டர் திரைப்படம், மிக பெரிய அளவில் பேசப்பட்டது. இந்நிலையில் தற்போது இவர் நடித்து வெளிவர இருக்கும் படம் யாதும் ஊரே யாவரும் கேளிர்.

Advertisement

இந்த படத்தை மறைந்த இயக்குனர் ஜனநாதனின் உதவி இயக்குனரான வெங்கட கிருஷ்ண ரோகாந்த் இயக்கி உள்ளார். இந்த படத்தி சந்திரா ஆர்ட்ஸ் தயித்துள்ளனர். விஜய் சேதுபதிக்கு ஜோடியாக மேகா ஆகாஷ் நடித்துள்ளார் அவரோடு ரித்விகா , விவேக் , மோகன் ராஜா என பல பிரபலங்கள் நடித்துள்ளனர். வில்லனாக இயக்குனர் மகிழ் திருமேனி நடித்துள்ளார். இந்த படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இதை தொடர்ந்து தற்போது இந்த படத்தின் பர்ஸ்ட் சிங்கள் முருகா என்ற பாடல் தற்போது வெளியாகி உள்ளது. இந்த பாடலை நிவாஸ் கே பிரசன்னா இசையில் நடிகர் சிம்பு பாடியுள்ளார். தற்போது இந்த பாடல் வெளியாகி வைரலாகி வருகிறது.

Advertisement

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in