முகநூல் காதல்.. இதய நோயால் இறந்த காதலி.. இளைஞர் எடுத்த தவறான முடிவு | Viral Video

விளம்பரம்
விளம்பரம்

இந்த உலகில் காதல் என்ற மந்திரச் சொல் இல்லையென்றால் பலரது வாழ்க்கை வண்ணங்களால் நிறைந்து இருக்காது. பலருக்கு காதல் வரம், பலருக்கு சாபம் என்றாலும் அனைவரின் வாழ்விலும் காதல் என்னும் இன தென்றல் இதயத்தை வருடாமல் இருந்திராது. உலகில் பிறந்த ஓரறிவு புழு பூச்சியிடம் தொடங்கி ஆறறிவு மனிதன் வரை அன்பு காட்டி வாழ்ந்து வருகிறோம். அன்பினால் காதலால்தான் இந்த உலகமே இயங்கிக் கொண்டிருக்கிறது. இந்த காதலைப்பற்றிய உருக்கமான கதை கள்ளக்குறிச்சியில் நடந்துள்ளது.

கட்டாயம் படிக்கவும்  சிவாஜியாகவே வாழும் சிவாஜி ரசிகர்..அச்சு அசல் இருப்பதால் ரசிகர்கள் ஆச்சரியம்

முகநூல் காதல்.. இதய நோயால் இறந்த காதலி.. இளைஞர் எடுத்த தவறான முடிவு | Viral Video 1

விளம்பரம்

கள்ளக்குறிச்சி மேலத்தேனுர் கிராமத்தை சேர்ந்தவர் மணிகன்டன். இவருக்கு வயது 26. இவர் புகைப்பட கலைஞராக இருந்துள்ளார். இவர் சேலம் மாவட்டம் பெத்தநாயக்கன்பாளையம் பகுதியில் புகைப்பட ஸ்டியோ ஒன்று நடத்தி வந்தார். இந்த நிலையில் முகநூலில் பூமிகா என்ற பெண் அறிமுகமானார். இவர்கள் இருவரும் நல்ல நண்பர்களாக பேசி வந்துள்ளனர். சில நாட்களுக்குப் பிறகு இவர்கள் இருவருக்கும் இடையில் காதல் மலர்ந்துள்ளது. இருவரும் ஒருவரை ஒருவர் முகத்தைப் பார்க்காமலேயே காதலித்து வந்துள்ளனர். ஆனால் பூமிகாவுக்கு இதயநோய் இருந்துள்ளது. இதை மணிகண்டனிடம் கூறியுள்ளார். ஆனால் மணிகண்டன் அதெல்லாம் ஒன்றும் பிரச்சினை இல்லை சரியாகிவிடும் என்று ஆறுதல் கூறிவந்துள்ளார். Youtube Video Code Embed Credits: Polimer News

முகநூல் காதல்.. இதய நோயால் இறந்த காதலி.. இளைஞர் எடுத்த தவறான முடிவு | Viral Video 2

விளம்பரம்

ஒருநாள் பூமிகா போன் செய்தும் எடுக்கவே இல்லை. மணிகன்டனுக்கு பூமிகாவின் தொலைபேசி மட்டுமே தெரியும். எனவே தொடர்ந்து முயற்சி செய்து வந்துள்ளார். ஆனால் போன் எடுக்கப்படவே இல்லை. ஒருநாள் பூமிகாவின் பாட்டி போனை எடுத்து அவர் இறந்து போன செய்தியை தெரிவித்துள்ளார். இதனால் மனமுடைந்த மணிகண்டன் விஷம் அருந்தி தற்கொலைக்கு முயன்றார். சீரியஸான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். முகம் பார்க்காமலேயே, இதயநோய் உள்ள பெண்ணை காதலித்து அந்த பெண்ணுடன் தனது உயிரையும் மாய்த்துள்ளார் அந்த இளைஞன். அந்த வீடியோவை நீங்களும் காண..Watch the Below Video..

கட்டாயம் படிக்கவும்  சிவாஜியாகவே வாழும் சிவாஜி ரசிகர்..அச்சு அசல் இருப்பதால் ரசிகர்கள் ஆச்சரியம்

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment