The Indian Times

மேம்..ஒரே ஒரு ஆட்டோகிராப்.. சாய்பல்லவியை துரத்திய ரசிகர் | Sai Pallavi

மலையாளத்தில் “பிரமேம்” என்ற படத்தின் மூலம் பல கோடி உள்ளங்களை கொள்ளை கொண்டவர் சாய் பல்லவி. தமிழ் ரசிகர்களை மலையாள படங்கள் பக்கம் திருப்பிய பெருமை அவருக்கு உண்டு. மலர் என்ற டீச்சர் கதாபாத்திரத்தில் முதல் படத்திலேயே அடி தூள் கிளப்பி இருப்பார். படம் ஙெளியாகி பல வருடங்கள் ஆன போதிலும் இன்றளவும் மலரே பாடல் பலரின் மொபைல் ரிங் டோனாக இருக்கிறது என்று சொன்னால் அது மிகையில்லை. விஜய் டிவியில் ஒளிபரப்பான உங்களில் யார் அடுத்த பிரபுதேவா என்ற நடன நிகழ்ச்சி மூலம் தனது வாழ்க்கையை தொடங்கினார். பின்னர் வெளிநாட்டிற்கு சென்று மருத்துவம் படித்தார்.

Advertisement

அடிப்படையில் பல் மருத்துவரான இவர், மீண்டும் திரைத்துறையில் காலடி எடுத்து வைத்தார். சிறப்பான நடனம், அழகான நடிப்பு, ஓவராக அலட்டிக் கொள்ளாத தன்மை ஆகியவற்றால் இன்று பெரும் உயரத்தில் உள்ளார். தமிழ் படங்களில் சூர்யா, தனுஷ் போன்ற முண்ணனி நடிகர்களுடன் நடித்துவிட்டார். மலையாளம், தெலுங்கில் கலக்கி எடுத்து வருகிறார் சாய்பல்லவி. தமிழ் ரசிகர்களை விட தெலுங்கு ரசிகர்கள் அதிகம் என்று கூறும் அளவிற்கு மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தை வைத்துள்ளார். தெலுங்கு படத்தின் இசை வெளியீட்டு விழா நிகழ்ச்சி ஒன்றுக்கு சென்று இருந்தார் சாய் பல்லவி. அவர் பெயரை சொன்னதுமே ரசிகர்கள் கத்த ஆரம்பித்துவிட்டனர். Youtube Video Code Embed Credits: Sai Pallavi Youtube Channel

Advertisement

கரகோஷம், விசில் என அவரை பேச விடாமல் கத்திக்கொண்டே இருந்தனர். இதனால் அரங்கமே அதிர்ந்து போனது. அந்த அளவிற்கு தெலுங்கு ரசிகர்களின் மனதை கொள்ளை கொண்டுள்ளார். தற்போது ஒரு வீடியோ வைரலாகி வருகிறது. அதில் ரசிகர் ஒருவர் ஆட்டோகிராப் கேட்டு வருகிறார். அப்போது அவர் கொண்டு வந்த டி-ஷர்ட்டில் கையெழுத்து போட்டு தருகிறார். அந்த வீடியோவை நீங்களும் காண.. Watch the Below Video..

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in