வலிமை பட பாடலுக்கு நடு ரோட்டில் குத்தாட்டம் போட்ட சைத்ரா ரெட்டி | Chaitra Reddy

சன் டிவியில் ஒளிபரப்பாகிவரும் முக்கியமான தொடர்களில் ஒன்றுதான் கயல். இந்த சீரயலுக்கு பல ரசிகர்கள் உண்டு. இதில் கதாநாயகியாக நடித்து வருபவர் சைத்ரா ரெட்டி. இவருக்கு பல ரசிகர்கள் உண்டு. இவரை இன்ஸ்டாகிராம் மற்றும் யூடியப்பில் பின்பற்றுபவர்களின் எண்ணிக்கை மிக அதிகம். இவர் செய்யும் சின்ன சின்ன வீடியோக்கள் மற்றும் ரீல்ஸ்கள் வைரலாகி வருவது வாடிக்கையான ஒன்றுதான். இந்த நாடகத்தில் இவருக்கு ஜோடியாக நடித்து வருபவர் சோஷியல் மீடியாவை கலக்கி வரும் தம்பதிகளில் ஒருவரான ஆல்யாவின் கணவர் சஞ்சீவ்தான்.

வலிமை பட பாடலுக்கு நடு ரோட்டில் குத்தாட்டம் போட்ட சைத்ரா ரெட்டி | Chaitra Reddy 1

விளம்பரம்

சைத்ரா ரெட்டியின் பூர்வீகம் பெங்களூரு ஆகும். ஆனாலும் நடிக்க வேண்டும் என்ற ஆசையால் சென்னைக்கு வந்து நாடங்களில் நடிக்க ஆரம்பித்தார். தமிழில் “கல்யாணம் முதல் காதல் வரை” என்ற தொடர் மூலம் அறிமுகமாகினார். கயல் தொடருக்கு முன்னதாக சைத்ரா ஜீ தமிழில் ஒளிப்பரப்பான “யாரடி நீ மோகினி” என்ற தொடரில் வில்லியாக நடித்து அசத்தியிருப்பார். விறுவிறுப்பான இந்த தொடருக்கும், சைத்ராவின் நடிப்புக்கும் பல ரசிகர்கள் உண்டு. இதனால்தான் ஜீ தமிழ் சேனலில் இருந்து சன்டிவியில் நடிக்கும் வாய்ப்பு இவருக்கு கிடைத்தது என்று சொல்லலாம். Youtube video code embed credits: Tamil Viral Videos 24×7

வலிமை பட பாடலுக்கு நடு ரோட்டில் குத்தாட்டம் போட்ட சைத்ரா ரெட்டி | Chaitra Reddy 2

விளம்பரம்

மேலும் சைத்ரா ரெட்டி சில நாட்களுக்கு முன்பு வெளியான வலிமை படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து இருந்தார். தற்போது சைத்ரா ரெட்டியின் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. அதில் கயல் நாடகத்தில் தன்னுடன் சேர்ந்து நடிக்கும் நடிகர் ஒருவருடன் சைத்ரா வலிமை பட பாடலுக்கு நடுரோட்டில் குத்தாட்டம் போடுகிறார். அந்த வீடியோ பதிவிட்ட சில மணி நேரங்களில் 3 லட்சம் பார்வையாளர்களை கடந்துள்ளது. அந்த வீடியோவை நீங்களும் காண..Watch the Below Video..

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment