The Indian Times

சொந்த வீட்டிலேயே திருடி சாப்பிடும் மணிமேகலை…..Atleast இதுக்காவது kitchen பக்கம் போறீங்களே என கலாய்க்கும் ரசிகர்கள்

சின்னத்திரையில் தொகுப்பாளராக அறிமுகம் ஆகியவர் மணிமேகலை.சன் மியூசிக் சேனலில் பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி பிரபலமாகியவர் இவர்.தொகுப்பாளராக பணியாற்றிய அவர் தனது கலகலப்பான பேச்சால் பல ரசிகர்களை தனது வசம் இழுத்துள்ளார்.இவர் ஹுசைன் என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டு மகிழ்ச்சியாக தனது வாழ்க்கையினை வாழ்ந்து வருகிறார்.

Advertisement

சன் மியூசிக் தொலைக்காட்சியில் இருந்து விஜய் தொலைக்காட்சிக்கு தொகுப்பாளராக சென்று மிக பிரபலமாகினார்.இவருக்கான சரியான வாய்ப்பினை எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கும் பொழுதுதான் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் வாய்ப்பு கிடைத்தது.இந்த வாய்ப்பினை சரியாக பயன்படுத்திக்கொண்டு குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் நகைச்சுவையில் அதகளம் செய்து காண்பவர்களை வயிறுகுலுங்க சிரிக்க வைத்து வருகிறார்.இவருக்கு தற்போது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை மிக பெரிய ரசிகர்கள் கூட்டமே உள்ளது.

மேலும் தனது இன்ஸ்டாகிராமிலும் ரீல்ஸ் வீடியோக்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.தற்போது சொந்த வீட்டிலேயே பிஸ்கட்டை திருடி
அதனை டீயில் தொட்டுக்கொண்டு சாப்பிட்டுள்ளார்.இதனை வீடியோவாக எடுத்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு சாப்பாடு விசயத்துல நான் ஒரு பொம்பள ராக்கி பாய் என குறிப்பிட்டுள்ளார்.இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.இதனை பார்த்த ரசிகர்கள் ,பிஸ்கட் திருடுறதுக்காவது நீங்க கிச்சன் பக்கம் போறீங்களே அது வரைக்கும் சந்தோசம்என கமெண்ட் கலாய்த்து வருகின்றனர்.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in