The Indian Times

நான் கர்ப்பமா இருக்கிறேன்? முதல்முறையாக கர்ப்பமாக இருப்பது குறித்து பேசிய CWC மணிமேகலை

குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் மிக பிரபலம் ஆகியவர் மணிமேகலை.ஆரம்பத்தில் சேனலில் தொகுப்பாளராக அறிமுகம் ஆகியவர் மணிமேகலை.பல திரைபிரபலங்களை பேட்டியும் எடுத்துள்ளார். தொகுப்பாளராக பணியாற்றிய அவர் தனது கலகலப்பான பேச்சால் பல ரசிகர்களை தனது வசம் இழுத்துள்ளார்.பல நிகழ்ச்சிகளையும் இவர் தொகுத்து வழங்கியுள்ளார் .ஹுசைன் என்ற முஸ்லீம் இளைஞரை காதலித்து வந்த நிலையில் இவர்களது கல்யாணத்திற்கு வீட்டில் யாரும் அனுமதிக்க நிலையில் வீட்டை எதிர்த்து காதலித்தவரை திருமணம் செய்து கொண்டு மகிழ்ச்சியாக வாழ்க்கை நடத்தி வருகிறார்.

Advertisement

சன் மியூசிக்கில் இருந்து வெளியேறிய மணிமேகலை விஜய் தொலைக்காட்சியில் தொகுப்பாளராக களம் இறங்கி தற்போது குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கோமாளியாக அடித்து துவம்சம் செய்து வருகிறார்.இந்த நிகழ்ச்சி மூலம் மாபெரும் வரவேற்பை பெற்றுள்ளார் மணிமேகலை.இவருக்கென சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது.தற்போது இவர் தனது கணவருடன் இணைந்து யூடியூப் சேனல் தொடங்கி அதில் வீடியோ பதிவிட்டு அனைவரையும் மகிழ்வித்து வருகிறார்.இவருக்காகவே இந்த நிகழ்ச்சியை பார்ப்பவர்கள் நிறைய பேர் உள்ளனர்.

இவர் தற்போது குக் வித் கோமாளி நிகழ்ச்சியை விட்டு வெளியேறி உள்ளதாக அண்மையில் தனது சமூகவலைத்தள பக்கத்தில் அறிவித்திருந்தார்.இவரின் சினிமா வாழ்க்கையில் பெரும் திருப்புமுனையை ஏற்படுத்தியது இந்த நிகழ்ச்சி தான் இதில் இருந்து இவர் வெளியேறி உள்ளார் என்பது மிகவும் ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.இந்நிலையில் இவர் கர்ப்பமாக இருப்பதால் தான் நிகழ்ச்சியை விட்டு வெளியேறியுள்ளார் என கூறப்பட்டு வந்தது.இந்நிலையில் இதுகுறித்து ரசிகர்கள் ஒருவர் கேள்விக்கு பதிலளித்துள்ளார் மணிமேகலை,அதில் அவர் கூறியதாவது,நான் கர்ப்பமாக இல்லை அப்படி இருந்தால் அதை யூடியூப் சேனல்களும் சொல்லி உங்களுக்கு தெரியிற மாதிரி இருக்காது நானே தான் சொல்லுவேன் என கூறியுள்ளார்.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in