The Indian Times

யார் சூப்பர் ஸ்டார் என்ற கேள்விக்கு நெற்றியடியாக பதிலளித்த மிர்ச்சி சிவா… சூப்பர்ஸ்டார் பதவி போட்டிக்கு முற்றுப்புள்ளி வைத்த அகில உலக சூப்பர் ஸ்டார் சிவா

ரேடியோ ஜாக்கியாக தனது வாழ்க்கையை தொடங்கியவர் மிர்ச்சி சிவா.இவர் முதல் முறையாக நடித்த படம் 12பி.இப்படத்தில் நடிகர் ஷியாமுக்கு நண்பனாக வந்திருப்பிபர்.இப்படத்திற்கு பிறகு இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் இவர் நடித்த சென்னை 600028 படம் மாபெரும் ஹிட் அடித்தது.இப்படம் இவருக்கு ரசிகர்களிடம் பெரும் வரவேற்பினை பெற்றுக்கொடுத்தது,இப்படத்திற்கு பிறகு மீண்டும் இதே கூட்டணியில் சரோஜா படத்தில் நடித்திருந்தார்.பின்னர் இயக்குனர் சி எஸ் அமுதன் இயக்கத்தில் தமிழ்ப்படத்தில் நடித்து மாபெரும் ஹிட்டை கொடுத்தார் தமிழ் சினிமாவில். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

Advertisement

இப்படம் இவரது சினிமா வாழ்க்கையில் பெரும் திருப்பு முனையை ஏற்படுத்தியது.இவ்வாறு தனது படங்களின் மூலம் மக்களை மகிழ்வித்து வருகிறார் சிவா.இவருக்கு அடுத்ததாக பல படங்கள் வரிசையாக வெளியாக காத்திருக்கிறது.அதில் முதலாவதாக வெளியாக உள்ள படம் சிங்கிள் சங்கரும் ஸ்மார்ட்போன் சிம்ரன் ஆகும்.இப்படத்தின் ட்ரைலர் அண்மையில் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது.இப்படம் நாளை பிப்ரவரி 25 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

Advertisement

இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நேற்று நடைபெற்றது,இந்த சந்திப்பில் சூப்பர் ஸ்டார் தலைப்புக்கு போட்டி நடக்கின்றது,நீங்க யாருக்கு ஆதரவு என செய்தியாளர் கேள்வி எழுப்பவே அதற்கு பதிலளித்த சிவா எப்பொழுதும் ஒரே சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மட்டும் தான் என கூறி முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.இந்த வீடியோ ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது.

Embed video credits : THI CINEMAS

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in