The Indian Times

கோழி அறுக்கிற வேலையை நீ பாரு.. அவன் குரவலயை அறுக்கிற வேலையை நான் பார்க்கேன்… வரலட்சுமி சரத்குமார் மிரட்டும் கொ ன் றால் பாவம் டீசர் இதோ!!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகை வரலட்சுமி.கதாநாயகி,வில்லி ,துணை கதாபாத்திரம் என எதை கொடுத்தாலும் பட்டையை கிளப்புபவர்.இவர் இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நடிகர் சிம்பு நடிப்பில் வெளியாகிய போடா போடி படத்தின் மூலம் கதாநாயகியாக சினிமாவிற்குள் நுழைந்தவர் வரலக்ஷ்மி சரத்குமார்.இவர் தமிழ் படங்களில் மட்டுமில்லாமல் கன்னடம்,மலையாளம் தெலுங்கு போன்ற படங்களிலும் நடித்துள்ளார்.தனது நடிப்பு திறமையை வெளி காண்பித்து பலரசிகர்களை தனது வசம் இழுத்தவர்.இவர் நடித்த தாரை தப்பட்டை படம் மூலம் அனைவரையும் திரும்பி பார்க்க செய்தார்.அன்று முதல் இன்று வரை நடிப்பில் அதிக ஈடுபாடுடன் நடித்து ரசிகர்களை மகிழ்விக்கிறார்.வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

Advertisement

தமிழ் சினிமாவில் கதாநாயகியாக மட்டுமில்லாமல் வில்லியாகவும் நடித்து அசத்தி வருகிறார்.சர்கார் மற்றும் சண்டைக்கோழி 2 படங்களில் வில்லியாக நடித்து நல்ல வரவேற்பினை பெற்றார்.இந்த வருடம் மட்டும் படங்களை கையில் வைத்துள்ளார் வரலக்ஷ்மி.நிச்சயம் இவருக்கு இந்த 8 படமும் நல்ல வரவேற்பினை பெற்றுத்தரும் என எதிர்பார்க்கப்படுகிறது.மேலும் இவர் நடித்த தெலுங்கு மற்றும் கன்னட படங்களும் விரைவில் வெளியாக இருக்கிறது.மேலும் பல படங்களில் ஒப்பந்தமாகி பிசியாக நடித்து வருகிறார்.

Advertisement

இவர் தற்போது இயக்குனர் தயாள் பத்மநாபன் இயக்கத்தில் கொ ன் றால் பாவம் படத்தில் நடித்துள்ளார்.இப்படத்தில் இவருடன் சந்தோஷ் பிரதாப்.சார்லி மற்றும் ஈஸ்வரி ஆகியோர் நடித்துள்ளனர்.சாம் சிஎஸ் இசையமைத்துள்ளார்.தற்போது இப்படத்தின் டீசரை படக்குழு வெளியிட்டுள்ளது.டீசரில் வரலட்சுமி மிரட்டி எடுத்துள்ளார்.இந்த படம் வெற்றியடைய வேண்டும் என ரசிகர்கள் வரலட்சுமி மற்றும் படக்குழுவிற்கு தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.இந்த வீடியோ தற்போது யூடியூபில் ட்ரெண்ட் ஆகி வருகிறது

Embed video credits : TREND MUSIC

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in