The Indian Times

தனுஷ் பாடிய வா வாத்தி பாடல் முழு VIDEO SONG இதோ….

நடிகர் தனுஷ் தமிழ் சினிமா கொண்டாடும் முன்னணி நடிகர்களில் ஒருவர்.இவர் இயக்குனர் கஸ்தூரி ராஜாஅவர்களின் இரண்டாவது மகன் ஆவார். இவர்கள் குடும்பமே சினிமாவில் கொடிகட்டி பறக்கும் குடும்பம் காரணம் அப்பாவும் இயக்குனர்,அண்ணனும் இயக்குனர் என்பதாலே.அப்பா அண்ணன் மூலம் சினிமாவுக்குள் நுழைந்தாலும் தனது கடின உழைப்பினால் மட்டுமே இன்று இந்த இடத்தினை அடைந்துள்ளார்.துள்ளுவதோ இளமை என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகம் ஆகி இன்று ஹாலிவுட் வரை உயர்ந்திருக்கிறார் தனுஷ். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

Advertisement

அண்மையில் இவர் இயக்குனர் ஜவஹர் இயக்கத்தில் திருச்சிற்றம்பலம் படத்தில்நடித்திருந்தார்.இப்படம் உலகம் முழுவதும் வெளியாகி நல்ல வரவேற்பினை பெற்றது.இப்படத்தினை தொடர்ந்து தனுஷ் தெலுங்கில் சார் படத்திலும் நடித்து வருகிறார்.அண்மையில் தனுஷ் நடிப்பில் உருவாகிய நானே வருவேன் படம் நல்ல வரவேற்பினை ரசிகர்களிடம் பெற்றிருந்ததுதற்போது இயக்குனர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் வாத்தி படத்தில் நடித்துள்ளார்.இப்படத்தில் இவருக்கு ஜோடியாக சம்யுக்தா மேனன் நடித்துள்ளார்.சமுத்திரக்கனி இப்படத்தில் வில்லனாக நடித்துள்ளார்.இப்படத்திற்க்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார். இப்படம் அண்மையில் உலகம் முழுவதும் வெளியாகியுள்ளது.

Advertisement

ரசிகர்களிடம் இப்படம் நல்ல வரவேற்பினை பெற்று வசூலிலும் சாதனை படைத்து வருகிறது.இந்நிலையில் இப்படத்தில் இடம்பெற்ற வா வாத்தி பாடல் பெரும் ஹிட் அடித்தது.தற்போது இப்பாடலை தனுஷ் முழுவதுமாக பாடியிருக்கும் வீடியோவை இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் வெளியிட்டுள்ளார்.தனுஷ் குரலில் பாடல் இன்னும் ஒருபடி மேலே சென்று மனதை மயக்குகிறதே என ரசிகர்கள் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.பேசாமல் தனுஸ் பாடிய பாடலையே படத்தில் வைத்திருக்கலாம் என ரசிகர்கள் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Embed video credits : ADITYA MUSIC TAMIL

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in