The Indian Times

செல்லம் கால் நீட்டு…மனைவி நயன்தாராவுக்கு மெட்டி போட்டு விடும் விக்னேஷ் சிவன்

நயன்தாராவிற்கு விக்னேஷ் சிவனுக்கும் இடையே இருக்கும் காதல் அனைவரும் அறிந்தது.இயக்குனர் விக்னேஷ் சிவன் நயன்தாராவை வைத்து நானும் ரவுடி தான் படத்தினை இயக்கினார்.இப்படத்தில் இருவருக்கும் இடையே ஏற்பட்ட நட்பு காதலாக மாறியது.தற்போது இருவரும் காதல் பறவைகளாக சினிமா உலகையும் வெளி உலகையும் வலம் வந்து கொண்டிருக்கின்றனர்.மேலும் இருவரும் இணைந்து சொந்தமாக ரவுடி பிக்சர் எனும் தயாரிப்பு நிறுவனமும் வைத்து நல்ல தரமான படங்களை தயாரித்து வருகின்றனர்.வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

Advertisement

இருவரும் அடிக்கடி கோவில் மற்றும் சுற்றுலா சென்று புகைப்படங்களை இணையத்தில் பதிவேற்றி வருகின்றனர்.இவர்கள் பதிவேற்றும் இந்த புகைப்படங்கள் தான் அன்று இணையத்தில் பேசப்படும் முக்கிய பேசுபொருளாக மாறுகிறது,அந்த அளவிற்கு இவர்களுக்கு ரசிகர்கள் கூட்டம் உள்ளது.எப்பொழுது இவர்கள் திருமணம் செய்துகொள்ளுவார்கள் என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருந்தனர்.ஜூன் 9 ஆம் தேதி இன்று இருவருக்கும் திருமணம் என இரண்டு நாட்களுக்கு முன்னதாக விக்னேஷ் சிவன் அறிவித்திருந்தார்.அதன்படி சென்னையில் இன்று மகாபலிபுரம் பகுதியில் அமைந்துள்ள தனியார் ஹோட்டலில் பிரம்மாண்டமாக திருமணம் நடைபெற்றது.

பல திரை நட்சத்திரங்கள் இந்த திருமணத்தில் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினர்.சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தாலி எடுத்துக்கொடுத்து மணமக்களை வாழ்த்தி உள்ளார்.இந்த திருமண புகைப்படங்கள் தற்போது இணையத்தில் பெருமளவு வைரலாகி வருகிறது.இயக்குனர் விக்னேஷ் சிவனும் தனது கல்யாண புகைப்படத்தினை
இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவேற்றியுள்ளார்.தற்போது இவர் தனது காதல் மனைவிக்கு மெட்டி போட்டுவிடும் புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.இதனை நயன்தாரா ரசிகர்கள் இணையத்தில் வெகுவாக ஷேர் செய்து வருகின்றனர்

https://www.youtube.com/watch?v=O33iNBkT7bs

Embed video credits: behindwoods tv

Advertisement

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in