பீஸ்ட் படத்தின் டீசர் நாளை வெளியாகிறதா? இல்லை ட்ரைலர் வெளியாகிறதா? | Beast Movie

தளபதி விஜய் நடிப்பில் நெல்சன் இயக்கத்தில் வெளியாகவுள்ள திரைப்படம்தான் பீஸ்ட். விஜய் நடிப்பில் கடைசியாக வெளியான படம் மாஸ்டர் அதன் பிறகு எதிர்பார்ப்பை எகிற செய்துள்ள படம் என்றால் அது பீஸ்ட்தான். வெளியான அனைத்து போட்டோக்களிலும் விஜய் அவர்கள் துப்பாக்கியுடன் இருந்ததால் கண்டிப்பாக சண்டை காட்சிகள் நிறைந்த படமாகத்தான் இருக்கும் என்று தோன்றுகிறது. ஒரு மாலுக்குள் நடக்கும் சண்டைக்காட்சிகளை வைத்துதான் படம் நகரும் என்று சொல்லப்படுகிறது. இந்த படத்திற்கான எதிர்பாப்பு கூடியுள்ளதற்கு மற்றொரு காரணம் இயக்குனர் நெல்சன். இவர் இயக்கிய படமான டாக்டர் வேறு லெவலில் ஹிட் அடித்துள்ளதால் விஜய் ரசிகர்கள் பீஸ்ட் படத்தை மிக ஆவலுடன் எதிர்நோக்கியுள்ளனர். Youtube Video Code Embed Credits: Behindwoods TV

பீஸ்ட் படத்தின் டீசர் நாளை வெளியாகிறதா? இல்லை ட்ரைலர் வெளியாகிறதா? | Beast Movie 1

விளம்பரம்

இப்போது ஒரு சின்ன சிக்கல் உருவாகியுள்ளது. பீஸ்ட் வெளியாகி ஒரு நாள் கழித்து கேஜிஎஃப் வெளியாக உள்ளதால் தியேட்டர்கள் கிடைக்குமோ, கிடைக்காதோ என்ற கவலை ரசிகர்களிடையே உருவாகியுள்ளது. இதற்கு நடிகர் யாஷ் நேற்று ட்ரைலர் வெளியீட்டு விழாவின் போது இதுகுறித்து கேட்ட போது மாஸாக பதில் ஒன்றை அளித்துள்ளார். அதில் விஜய் எனக்கு சீனியர், அவரை நான் மிகவும் மதிக்கிறேன், அவர் ரசிகர்களுக்காக செய்யும் தியாகங்கள் எனக்கு மிகவும் பிடிக்கும் என்று கூறினார். மேலும் தானும் விஜய் ரசிகர்தான் என்றும், இது தேர்தல் அல்ல ஒரு ஓட்டு ஒருவருக்குதான் என்று போட இது திரைப்படம் இரண்டு படத்தையும் தாராளமாக பார்க்கலாம் என பதிலளித்தார். Twitter Original Source From: Nelson Dilipkumar

விளம்பரம்

யாஷின் இந்த பேச்சை நெட்டிசன்கள் பாராட்டி வருகின்றனர். தற்போது நெல்சன் ஒரு ட்வீட் ஒன்றை போட்டுள்ளார். அதில் “நாளை” என்று மொட்டையாக போட்டுள்ளார். இதனால் நாளை டீஸர் அல்லது ட்ரைலர் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இவரின் இந்த டீவீட்டால் ரசிகர்கள் பெரும் மகிழ்ச்சியில் உள்ளனர். ஏப்ரல் 13ம் தேதி படம் வெளியாகும் என்று ஏற்கனவே அதிகாரபூர்வமாக அறிவித்துள்ள நிலையில் ரசிகர்கள் சன் பிக்சர்ஸ் பக்கத்தில் எப்போது டீஸர், ட்ரைலர் என்று கமெண்ட்களை போட்டு வருகின்றனர். இப்போது நெல்சன் நாளை என்று ட்வீட் செய்துள்ளதால் ரசிகர்கள் இப்போதே கொண்டாட்டத்தில் திளைத்துள்ளனர்..அந்த வீடியோவை நீங்களும் காண..Watch the Below Video..

கட்டாயம் படிக்கவும்  அழகி பட நடிகையை நியாபகம் இருக்கா? அவரின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment