RRR படத்தோட மூணு நாள் வசூல் மட்டும் எவ்வளவு தெரியுமா? யப்பா இவ்வளவு கோடியா? | RRR Movie Collection

RRR படம் வெளியாகி மூன்று நாட்களை கடந்துவிட்டது. வசூலில் மகத்தான சாதனை புரிந்துள்ளது இந்த படம். வெளியான மூன்றே நாட்களில் படத்தின் பட்ஜெட்டை திருப்பி எடுக்கும் அளவிற்கு சாதனை புரிந்துள்ளது. இந்திய திரைத்துறையில் புது அத்தியாயம் படைத்த படம்தான் பாகுபலி. மிகப்பிரம்மாண்டமாய் இருந்த அந்த படத்தை இயக்கியவர் இயக்குனர் ராஜமௌலி. பாகுபலி 1 வெற்றிக்குப் பின் அவர் பாகுபலி 2 என்ற படத்தை எடுத்தார். சமீபத்தில் ஒரு பேட்டியின் போது பாகுபலி படத்தின் கதாநாயகனான பிரபாஸ், பாகுபலி 3 படம் எடுக்க வாய்ப்புள்ளதாக தெரிவித்து இருந்தார். தற்போது ராஜமௌலி அவர்கள் இயக்கித்தில் RRR என்னும் படம் திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. ராம் சரண், ஜீனியர் என்.டி. ஆர், ஆலியா பட் ஆகியோர் நடித்துள்ளனர்.

கட்டாயம் படிக்கவும்  தோழியின் திருமணத்தில் REUNION செய்த நடிகை ராஷ்மிக்கா மந்தனா

RRR படத்தோட மூணு நாள் வசூல் மட்டும் எவ்வளவு தெரியுமா? யப்பா இவ்வளவு கோடியா? | RRR Movie Collection 1

விளம்பரம்

குறிப்பாக இந்த படத்தில் தனது கடின உழைப்பை கலைஞர்கள் அனைவரும் கொடுத்துள்ளனர் என்றுதான் சொல்ல வேண்டும். தயாரிப்பு, கலை, வடிவம், கிராபிக்ஸ் காட்சிகள் என பார்க்கும் ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது படக்குழு. குறிப்பாக சொல்ல வேண்டுமானல் புலிவேட்டைக் காட்சி மற்றும் பாலத்தில் ரயில் பற்றி எரியும் காட்சிகள் போன்றவை கிராபிக்ஸில் பின்னி எடுத்துள்ளன என்றுதான் சொல்ல வேண்டும். 1920 காலப்பகுதியில் ஆங்கிலேயர்கள் கட்டுப்பாட்டில் இருந்த இந்தியாவை காட்டியுள்ளார் இயக்குனர். ஆனால் படத்தின் கதையில் சில சுணக்கங்களும் காணப்படுகிறது. பாகுபலி போல் RRR கற்பனை கதையில்லை. வரலாறு கதை. ஆனால் ராம்சரண் ஆங்கிலேயர்களை கடவுள் ராமர் போன்று வில் அம்பு கொண்டு வீழ்த்துவது போன்ற காட்சிகள் அறிவுக்கு எட்டாதவையாக இருக்கின்றன. YouTube video code embed credits: Cineulagam

RRR படத்தோட மூணு நாள் வசூல் மட்டும் எவ்வளவு தெரியுமா? யப்பா இவ்வளவு கோடியா? | RRR Movie Collection 2

விளம்பரம்

 

கட்டாயம் படிக்கவும்  ரசிகர்களை சந்தித்த நடிகர் கார்த்தி

பாகுபலி போன்ற கற்பனை குதிரைகளை கட்டவிழ்த்து விடும் படங்கள் என்றால் இந்த பிரச்சினைகள் இல்லை. ஆனால் இந்திய சுதந்திர போராட்டத்தை மையக் கருவாக கொண்டு உருவாக்கப்படும் படங்களில் ஆயுதம் தாங்க ஆங்கிலேயர்களை வில் அம்பு கொண்டு வீழ்த்தும் கற்பனைகள் எல்லாம் கொஞ்சம் ஓவர் என்ற கமெண்டுகளும் வந்த வண்ணம் உள்ளன. ஆனாலும் கதை நகரும் விதம், சொல்ல வந்த கருத்து ஆகியவற்றின் அடிப்படையில் பார்க்கும் பொழுது ரசிகர்களை படம் பெரிதளவில் கவர்ந்து உள்ளது என்றே சொல்லலாம். அப்படி பிரம்மாண்டமாக எடுக்கப்பட்டுள்ள இந்த படத்தின் மொத்த பட்ஜெட் 500 கோடி. ஆனால் படம் வெளியாகி மூன்றே நாட்களில் வசூல் 500 கோடியை எட்டியுள்ளனர். இது எந்த படமும் செய்யாத சாதனையாகும். படத்தை போலவே வசூலிலும் பிரம்மாண்டத்தை குவித்துள்ளது RRR. அந்த செய்தியை நீங்களும் காண.. Watch the below video..

விளம்பரம்
கட்டாயம் படிக்கவும்  தோழி குஷ்பு, ரம்பா மற்றும் கலாவை சந்தித்து மகிழ்ந்த நடிகை மீனா

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment