நான் விஜய் Fan..பீஸ்ட்க்காக நானே waiting..சர்ச்சைகளுக்கு மரண மாஸாக பதிலடி கொடுத்த யாஷ் | Beast Vs KGF2

தளபதி விஜய் நடிப்பில் நெல்சன் இயக்கத்தில் வெளியாகவுள்ள திரைப்படம்தான் பீஸ்ட். விஜய் நடிப்பில் கடைசியாக வெளியான படம் மாஸ்டர் அதன் பிறகு எதிர்பார்ப்பை எகிற செய்துள்ள படம் என்றால் அது பீஸ்ட்தான். வெளியான அனைத்து போட்டோக்களிலும் விஜய் அவர்கள் துப்பாக்கியுடன் இருந்ததால் கண்டிப்பாக சண்டை காட்சிகள் நிறைந்த படமாகத்தான் இருக்கும் என்று தோன்றுகிறது. ஒரு மாலுக்குள் நடக்கும் சண்டைக்காட்சிகளை வைத்துதான் படம் நகரும் என்று சொல்லப்படுகிறது. இந்த படத்திற்கான எதிர்பாப்பு கூடியுள்ளதற்கு மற்றொரு காரணம் இயக்குனர் நெல்சன். இவர் இயக்கிய படமான டாக்டர் வேறு லெவலில் ஹிட் அடித்துள்ளதால் விஜய் ரசிகர்கள் பீஸ்ட் படத்தை மிக ஆவலுடன் எதிர்நோக்கியுள்ளனர்.

கட்டாயம் படிக்கவும்  மீனாவின் கணவருக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்திய நடிகர் ரஜினிகாந்த்

நான் விஜய் Fan..பீஸ்ட்க்காக நானே waiting..சர்ச்சைகளுக்கு மரண மாஸாக பதிலடி கொடுத்த யாஷ் | Beast Vs KGF2 1

விளம்பரம்

இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே, வி.டி.வி கணேஷ், கிங்க்ஸ்லி ஆகியோர் நடித்துள்ளனர். படம் பெரிய அளவில் எதிர்பார்க்கப்பட மற்றொரு காரணம் அனிருத். இந்ந படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். வெளியான அரபிக் குத்து, ஜாலியோ ஜும்கானா இரண்டு பாடல்களும் மில்லியன் பார்வையாளர்களை தாண்டி போய் கொண்டுள்ளது. மேலும் படம் ஏப்ரல் 13 வெளியாகிறது என்ற அறிவிப்பால் ரசிகர்கள் மேலும் குஷியாகி உள்ளனர். ட்ரைலர் எப்போது வரும் என்று சன் பிக்சர்ஸின் பக்கங்களில் கமெண்டுகளை தெறிக்க விட்டு வருகின்றனர். இது இப்படி இருக்கையில் சமீபத்தில் வெளியாகி பல ரசிகர்களை உருவாக்கிய படம் கேஜிஎஃப். கன்னட நடிகர் யாஷ் நடிப்பில் வெளியான இந்த படத்திற்கு தமிழ்நாட்டில் பல ரசிகர்கள் உண்டு. YouTube video Code Embed Credits: Little Talks

நான் விஜய் Fan..பீஸ்ட்க்காக நானே waiting..சர்ச்சைகளுக்கு மரண மாஸாக பதிலடி கொடுத்த யாஷ் | Beast Vs KGF2 2

விளம்பரம்

தமிழின் முண்ணனி நடிகர்களுக்கு இணையாக அந்த படத்தின் இரண்டாம் பாகத்தை எதிர்நோக்கி தமிழ் ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கின்றனர். ஆனால் அதில் இப்போது ஒரு சின்ன சிக்கல் உருவாகியுள்ளது. பீஸ்ட் வெளியாகி ஒரு நாள் கழித்து கேஜிஎஃப் வெளியாக உள்ளதால் தியேட்டர்கள் கிடைக்குமோ, கிடைக்காதோ என்ற கவலை ரசிகர்களிடையே உருவாகியுள்ளது. இதற்கு நடிகர் யாஷ் நேற்று ட்ரைலர் வெளியீட்டு விழாவின் போது இதுகுறித்து கேட்ட போது மாஸாக பதில் ஒன்றை அளித்துள்ளார். அதில் விஜய் எனக்கு சீனியர், அவரை நான் மிகவும் மதிக்கிறேன், அவர் ரசிகர்களுக்காக செய்யும் தியாகங்கள் எனக்கு மிகவும் பிடிக்கும் என்று கூறினார். மேலும் தானும் விஜய் ரசிகர்தான் என்றும், இது தேர்தல் அல்ல ஒரு ஓட்டு ஒருவருக்குதான் என்று போட இது திரைப்படம் இரண்டு படத்தையும் தாராளமாக பார்க்கலாம் என பதிலளித்தார். இவரின் இந்த பேச்சை நெட்டிசன்கள் பாராட்டி வருகின்றனர். அந்த வீடியோவை நீங்களும் காண..Watch the below video..

கட்டாயம் படிக்கவும்  PRIVATE PARTY பாடலுக்கு CUTE ஆக கண்ணாடி முன்பு ஆடிய நடிகை பிரியங்கா மோகன்

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment