The Indian Times

இப்ப இருக்குற கடுப்புல,உன்னையும் கொன்றனும் போலே இருக்கு:ரத்தம் தெறிக்க வெளியாகியது சாணிக்காயிதம் ட்ரைலர்

நடிகை கீர்த்தி சுரேஷ் மற்றும் இயக்குனர் செல்வராகவன் இணைந்து முதல்முறையாக நடிக்கும் சாணிக்காயிதம் படத்தின் ட்ரைலர் வெளியாகியது.தமிழ் சினிமாவின் முன்னணி நடிகை கீர்த்தி சுரேஷ்.இவர் தமிழில் மட்டுமல்ல தெலுங்கு சினிமாவிலும் மிக பிரபலமானவர்.இவர் தற்போது இயக்குனர் செல்வராகவன் உடன் இணைந்து சாணிக்காயிதம் படத்தில் நடித்துள்ளார்.இப்படத்தினை இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இயக்கியுள்ளார்.ஸ்க்ரீன் சீன் நிறுவனம் இப்படத்தினை தயாரிக்க சாம் சிஎஸ் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.

இப்படம் திரையரங்கில் வெளியாகும் என எதிர்பார்த்திருந்த நிலையில் தற்போது இப்படம் அடுத்த மே மாதம் 6 ஆம் தேதி அமேசான் ஓடிடி தளத்தில் நேரிடையாக வெளியாக உள்ளதாக படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. இப்படத்தின் டீசர் நான்கு நாட்கள் முன்னே வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் இப்படத்தின் ட்ரைலரை அமேசான் நிறுவனம் தற்போது வெளியிட்டுள்ளது

Advertisement

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in