The Indian Times

டான் படத்தில் நடிகர் சமுத்திரக்கனியின் கதாபாத்திரம் என்ன தெரியுமா?வெளியான சூப்பர் தகவல்

டான் படத்தில் நடிகர் சமுத்திரக்கனியின் கதாபாத்திரம் என்ன என்பது குறித்து இயக்குனர் சிபி அறிவித்துள்ளார்  உன்னை சரணடைந்தேன் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு இயக்குனராக  அறிமுகமாகியவர் நடிகர் மற்றும் இயக்குனருமான சமுத்திரக்கனி.நாடோடிகள் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் பரவலாக பேசப்படும் இயக்குனராக மாறினார்.பின்னர் தொடர்ந்து படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க தொடங்கினர்.இவர் முதன்முதலாக பார்த்தாலே பரவசம் என்கிற படத்தில் சிறப்புத்தோற்றத்தில் திரையில் தோன்றி தற்போது இவர் இல்லாத படங்கள் இல்லை என்ற நிலைக்கு நடிகராகவும் சாதித்துள்ளார் சமுத்திரக்கனி.

Advertisement

இவர் தமிழில் மட்டுமில்லாமல் தெலுங்கிலும் நடித்து அசத்தி வருகிறார்.ராஜமவுலி இயக்கத்தில் அண்மையில் வெளியாகிய RRR படத்தில் போலீஸ் கதாபாத்திரத்தில் நடித்து அசத்தியிருப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.அதனை தொடர்ந்து இவர் தற்போது நடிகர் சிவகார்த்திகேயனின் டான் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.இப்படத்தில் இவர் என்ன கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் என ரசிகர்களிடம் கேள்வி எழுந்துள்ள நிலையில் தற்பொழுது இப்படத்தின் இயக்குனர் சிபி சக்கரவர்த்தி அதற்கு பதிலளித்துள்ளார்.

Advertisement

நடிகர் சமுத்திரக்கனியின் பிறந்தநாளான இன்று டான் பட இயக்குனர் அவருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் தெரிவித்து,டான் படத்தில் நடிகர் சிவகார்த்திகேயனுக்கு அப்பாவாக சமுத்திரக்கனி நடித்துள்ளதாக தகவலும் அளித்துள்ளார்.ஏற்கனவே இவர் ரஜினி முருகன் படத்தில் சிவகார்த்திகேயனுக்கு எதிரியாக நடித்திருந்த நிலையில் தற்போது அப்பாவாக நடித்திருப்பது படத்திற்கு கூடுதல் எதிர்பார்ப்பினை சேர்க்கும் விதமாக அமைந்துள்ளது.டான் படம் அடுத்த மாதம் மே 13 ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது .

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in