The Indian Times

பீஸ்ட் கிளைமாக்ஸ் சூப்பரா இருக்கு, அபிஷேக் ராஜா போட்ட சர்ச்சை ட்வீட்..செம்ம கடுப்பில் ரசிகர்கள்

பிக்பாஸ் சீசன் 5ல் கலந்து கொண்ட போட்டியாளர்களுள் ஒருவர் தான் அபிஷேக் ராஜா. இவர் போட்டியில் கலந்து கொண்ட நாள் முதல் இவர் வெளியேறும் வரை ரசிகர்களிடையே வெறுப்பை மட்டுமே சம்பாதித்தார். இவருடைய அதீதமான பேச்சுக்கள் பார்ப்பவர்களுக்கு வெறுப்பை கொடுத்தது. அதனால் தான் இரண்டாவது ஆளாக வெளியேற்றப்பட்டார். மேலும் வெளியில் இவர் பிக்பாஸை பற்றியும், கமலஹாசனைப் பற்றியும் கடுமையாக விமர்சித்து இருந்தார். நீ முதலமைச்சர் ஆவதற்கு பிக்பாஸ்ன்னு ஒன்னு நடத்துற பாரு என்று கமலை நேரடியாக தாக்கி பேசி இருப்பார். பின்னர் பிக்பாஸ் சீசன் 5ல் கலந்து கொண்ட பின்னர் தான் பிக்பாஸ் நிகழ்ச்சியை ஒருமுறை கூட பார்த்ததேயில்லை என்று முன்னுக்குப்பின் முரணாக சொல்லி கமலிடம் மாட்டிக் கொண்டார். Twitter Original Source from: S Abishek Raaja

Advertisement

பின்னர் மீண்டும் இவரை வைல்ட் கார்ட் என்று சொல்லி உள்ளே கொண்டு வந்தனர் பிக்பாஸ் டீம். மக்கள் ஒருமுறை வெளியே அனுப்பிய நபரை இஷ்டத்திற்கு வைல்ட் கார்ட் எனச் சொல்லி உள்ளே அனுப்புவது மீண்டும் மக்களுக்கு எரிச்சலை கொடுத்தது. எனவே மீண்டும் அவர் வெளியேற்றப்பட்டார். பின்னர் பிக்பாஸ் எல்லாம் முடிந்த பிறகு பிரியங்கா, மதுமிதா, பாவனியுடன் சேர்ந்து ஹைதராபாத்தில் ஜாலியாக ட்ரிப் அடித்து வந்தார். தற்போது இவர் போட்டுள்ள ஒரு ட்வீட் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. நெல்சன் இயக்கத்தில் தளபதி விஜய் அவர்கள் நடிப்பில் உருவாகியுள்ள படம்தான் பீஸ்ட். துப்பாக்கிகளும், ரத்தக் களரியுமாக போஸ்டர்கள் வந்த வண்ணம் உள்ளன. Youtube Video Code Embed Credits: Indiaglitz

Advertisement

 

https://twitter.com/cinemapayyan/status/1505912359583305731

இதையெல்லாம் வைத்துப் பார்க்கும் போது பீஸ்ட் சண்டை காட்சிகள் நிறைந்த படமாக இருக்கும் என்று தோன்றுகிறது. தற்போது அபிஷேக் போட்டுள்ள அந்த ட்வீட்டும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. அதில் அவர் கிளைமாக்ஸ் படத்தின் சண்டை காட்சிக்காக படத்தின் டெக்னிக்கல் டீம் பெரிதாக பேசப்படுவார்கள் என்று ட்வீட் செய்துள்ளார். இதனால் விஜய் ரசிகர்கள் செம்ம கடுப்பில் உள்ளனர். மேலும் அபிஷேக்கை திட்டி அவருக்கு கமெண்டுகளை போட்டு வருகின்றனர். படம் ஏப்ரல் 11ம் தேதி ரிலீஸ் ஆகும் என்று அறிவித்த நிலையில் அபிஷேக் படத தை பார்த்துவிட்டது போன்று கமெண்ட் போட்டு இருப்பது விஜய் ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்த வீடியோவை நீங்களும் காண..Watch the Below Video..

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in