The Indian Times

வெங்கட் பிரபு இயக்கத்தில் அசோக் செல்வன் நடிக்கும் “மன்மத லீலை” படத்தின் Official Trailer

நடிகர் அசோக் செல்வன் நடிப்பில் வெளியாகவுள்ள திரைப்படம் “மன்மத லீலை”. இந்த படத்தை வெங்கட் பிரபு இயக்கியுள்ளார். அவரது தம்பி பிரேம்ஜி இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார். இந்த படத்தின் ட்ரைலர் தற்போது வெளியாகி, பல இளைஞர்களை கவர்ந்துள்ளது. முத்தக்காட்சிகள், சரக்கு, தம் என ஏ ரேட் படமாக இந்த படத்தை இயக்கியுள்ளார் வெங்கட் பிரபு. அவரின் 10வது படமான மன்மத லீலையை ராக்போர்ட் என்டர்டைன்மென்ட் தயாரித்துள்ளது. மாநாடு வெற்றிக்குப் பின்னர் அவரின் இந்த படம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த படத்திற்கு வெங்கட் பிரபுவின் உதவி இயக்குநர் மணிவண்ணன் இந்த கதையை எழுதியுள்ளார்.

Advertisement

அசோக் செல்வன் எப்பொழுதும் வித்தியாசமான கதையை தேர்ந்தெடுத்து நடிப்பவர். தெகிடி, ஓ மை கடவுளே போன்ற படங்களில் நல்ல நடிப்பை கொடுத்துள்ளார். அவர் நடிப்பில் கடைசியாக வெளியாகி வெற்றியடைந்த படம் “ஓ மை கடவுளே”. இது 2018ம் ஆண்டு வெளியானது. அதன் பின்னர் அவர் நடிப்பில் வெளியாகவுள்ள படம்தான் மன்மத லீலை. இந்த படத்தில் இவருக்கு ஜோடியாக சம்யுக்தா ஹெக்டே,ரியா சுமன், ஸ்மிருதி வெங்கட் ஆகியோர் நடித்துள்ளனர். திருமணம் முடிந்த ஒரு ஆணுக்கு இன்னொரு பெண்ணுடன் ஏற்படும் காதல் குறித்ததுதான் இந்த படம். இந்த படத்தின் Glimpse காட்சிகளை கடந்த மாதம்படக்குழு வெளியிட்டு இருந்தனர். அதில் அசோக் செல்வன் மாறி மாறி முத்த மழையை பொழிந்து இருப்பார். YouTube Video Code Embed Credits: BlackTicket Company

Advertisement

தற்போது இந்த படத்தின் ட்ரைலர் வெளியாகியுள்ளது. மாட்டிக் கொள்ளாத வரை எல்லா ஆண்களும் ராமர்தான் என்ற வரிகளுடன் தொடங்குகிறது. இதில் சரக்கு அடிப்பது, தம் அடிப்பது, பெட் ரூம் காட்சிகள், முத்தக்காட்சிகள் என அடி தூள் கிளப்பியுள்ளது. ட்ரைலர் வெளியான ஒரே நாளில் ஒரு மில்லியன் பார்வையாளர்களை கடந்துள்ளது. இளைஞர்களை கவரும் வகையில் ஏ படமாக இந்த படத்தை வெங்கட் பிரபு இயக்கியுள்ளார். அந்த ட்ரைலரை நீங்களும் காண..Watch the Manmadha leelai Trailer Below..

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in